Sharing is caring!

Eating Junk Food During Pregnancy: தாய்மை என்பது இறைவன் கொடுத்த வரமாகும். தாயாக இந்த உலகத்திற்கு புதிய உயிரைக் கொண்டு வருவதற்கு ..? பெண்கள், கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை உட்கொள்வது பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆம், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஆரோக்கியமான சத்தான உணவு பொருட்களை உட்கொள்வது அவசியம். அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வளரும்.

மேலும் படிக்க….Weight Loss Drinks: உடல் எடையை ஃபிட்டாக வைக்கும் மேஜிக் பானம்…! மிஸ் பண்ணாம எடுத்துகோங்கோ..!

ஜங்க் ஃபுட் உணவு பொருட்கள்:

எனவே, உணவு விஷத்தை பொறுத்த வரை கர்ப்பிணி பெண்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, ஜங்க் ஃபுட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், குளிர்பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் இனிப்பு கலந்த பாக்கெட் உணவு பொருட்களில் அதிக அளவில் ரசாயனம் நிறைந்துள்ளது. இத்தைய உணவு பொருட்கள் இதய நோய் பாதிப்பு, உடல் எடை அதிகரிப்பது, புற்றுநோய், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

ஆய்வில் வெளிவந்த உண்மை:

இத்தகைய உணவு பொருட்களை கர்ப்பிணிகள் உண்பதால், குழந்தையின் வளர்ச்சியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரேசில் ஆய்வு ஒன்று கூறியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் முறையாக கர்ப்பம் தரித்த 25 வயது நிறைந்த 412 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை உட்கொண்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு வழக்கத்தை காட்டிலும், கருவளர்ச்சி மற்றும் குழந்தையின் தொடை எலும்பு சற்று பெரியதாக வளரும் வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

குறிப்பாக, உடல் வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் தேவையான மாவுச்சத்து, புரதச்சத்துக்கள், ஆற்றல் தரும் கொழுப்பு சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற நல்ல சமச்சீரான சரிவிகித உணவுகளை உட்கொள்வது அவசியம்.

கர்ப்பிணி பெண்கள் இரும்புச்சத்து நிறைந்த கீரை, முளைகட்டிய தானியங்கள், சிவப்பு இறைச்சி, பச்சை காய்கறிகள் போன்றவற்றை உட்கொள்ளலாம். இவை இரத்த அணுக்களை உருவாக்கி தாய்க்கும், சேய்க்கும் இரத்த சோகை வராமல் பாதுகாக்கும்.

குழந்தையின் முதுகெலும்பு, மூளை மற்றும் மண்டையோட்டின் இயல்பான வளர்ச்சிக்கு தேவையான போலிக் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, பருப்பு வகைகள், கீரை, பீட்ரூட் மற்றும் முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

கால்சியம் நிறைந்த உணவுகள்:

மேலும், குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே, தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பால் எடுத்துக் கொள்வது அவசியம். இதனை தவிர்த்து குறைத்து கொழுப்பு நிறைந்த தயிர், சோயா பால் எடுத்துக் கொள்வது குழந்தையின் எலும்புகளை வலுவாக்கும். ஒரு நாளைக்கு தேவையான கால்சியத்தின் அளவு 1000 மி. கிராம் ஆகும். இதனை தவிர்த்து, நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 மணி நேரம் நல்ல தூக்கம். மிதமான உடற்பயிற்சி, யோக, நீச்சல் பயிற்சி போன்றவை உங்களை எப்போதும் சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.

மேலும் படிக்க…ஆண்களின் விந்தணுக்களை மடமடவென அதிகரிக்கும் சூப்பர் 10 உணவுகள்..! மிஸ் பண்ணீடாதீங்கோ..!

(Visited 34 times, 1 visits today)

Sharing is caring!