Sharing is caring!

Dress washing tips in tamil|: இன்றைய நவீன காலத்தில், கைகளில் துணி துவைக்கும் பழக்கம் குறைந்து விட்டது. நம் அனைவரின் வீடுகளிலும், வாஷிங் மெஷின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு புது துணி எடுக்கும் பழக்கம் மாறிப்போயி, இப்போது விரும்பும் போது எல்லாம் ஆன்லைன் மூலம் துணிகளை ஆர்டர் பண்ணி கொள்கிறோம்.

அப்படி, நாம் என்னதான் விதவிதமான துணிகளை ஆன்லைன் மூலம் வாங்கி உடுத்தி அழகு பார்த்தாலும், இரண்டு, மூன்று முறை துவைத்து பிறகு பார்த்தால், அவற்றின் தன்மை மாறி பழைய துணி மாதிரி, சுருங்கி போய் விடுகிறது. எனவே, இனிமேல் நீங்கள் துணிகள் துவைத்த பிறகு சுருக்கம் இல்லாமல் அயர்ன் பண்ண புதிய துணி மாதிரி இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக்கொள்ள போகிறோம்.

இனிமேல் நீங்கள் துணி துவைக்கும் பொழுது கஞ்சி போட்டு துவைத்து பாருங்கள். அதிலும், குறிப்பாக காட்டன் துணிகளுக்கு இந்த முறையை பின்பற்றி பாருங்கள், நிச்சயம் நல்ல ரிசல்ட் இருக்கும்.

உங்கள் கசங்கிய துணிகளை புதியது போல் மாற்றும் டிப்ஸ்:

டிப்ஸ்1:

இதற்கு நீங்கள் முதலில் சாதம் வடித்த கஞ்சியை 1 கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு துவைத்த துணிகளை சிறிது நேரம் அதில் போட்டு ஊற வைத்து பின்னர் அலசி எடுங்கள். இப்படி செய்வதால் உங்கள் துணிகள் அயர்ன் பண்ணிய துணி போல் சுருங்காமல் விரைப்பாக இருக்கும்.

டிப்ஸ்2:

இதேபோல், நீங்கள் 2 கப் ஜவ்வரிசி எடுத்து மிக்ஸியில் போட்டு பவுடர் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனை 4 கப் அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து கஞ்சி போல் வரும் போது அடுப்பை அணைத்து விடவும். இதையடுத்து, ஒரு பக்கெட்டில் கால் கப் அளவிற்கு கஞ்சி சேர்த்து, தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் துணிகளை துவைத்த எடுத்த பிறகு, ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனை சாதராண குளிர்ந்த தண்ணீரில் அலசினால் போதும், துணிமணிகள் சுருங்காமல் விரைப்பாக இருக்கும். இதனை எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும், நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

துவைத்த துணிகள், எப்போதும் வாசனையாக இருக்க டிப்ஸ்:

டிப்ஸ்3:

அதேபோல், பீரோவில் உங்கள் துணிகள் எப்போதும் வாசனையாக இருப்பதற்கு, இந்த ஒரு பொருளை அந்த இடத்தில் வைத்து பாருங்கள். அதற்கு முதலில், மஞ்சள் தூள், கல் உப்பு, வாசனை நிறைந்த டெட்டால் அல்லது கம்போர்ட் போன்ற பொருட்களை தலா 3 டீஸ்புன் அளவு எடுத்து ஒரு காலியான பாத்திரத்தில் போட்டு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு, இதனை காய வைத்து மறுநாள் உருண்டையாக உருட்டி, காட்டன் துணிகளில் சுற்றி நீங்கள் துணி வைக்கும் உங்கள் வீட்டு பீரோ, அலமாரி போன்ற இடங்களில் வைத்தால் போதும், எப்போதும், வாசனை நிறைந்திருக்கும். மேற்கூறிய இந்த டிப்ஸ் அனைத்தும் உங்களுக்கு பிடித்திருந்தால், நிச்சயம் வீட்டில் பின்பற்றி பாருங்கள்.

(Visited 18 times, 1 visits today)

Sharing is caring!