Aadi Amavasai 2023: சூரியனும், சந்திரனும் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் ஒரே நேர்கோட்டில் இணையும் நாளை நாம் அமாவாசை என்கின்றோம். இந்த நாட்களில் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
இந்த 2023 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை:
ஒவ்வொரு வருடம் தை, புரட்டாசி மற்றும் ஆடி மாதங்களில் அமாவாசை வரும் என்றாலும், இந்த ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. ஆம், தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.
அதன்படி, இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் ஆடி அமாவாசை வருகிற ஜூலை 17 ஆம் தேதி அதாவது ஆடி மாதத்தின் முதல் தேதி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது ஆடி அமாவாசை வருகிற ஆகஸ்ட்16 ஆம் தேதி அதாவது ஆடி மாதத்தின் கடைசி தேதி வருகிறது. இந்த நாட்களில் நம்முடைய முன்னோர்களை நினைத்து விரதமிருந்து வழிபடுவது வழக்கம். ஏனெனில், இந்த நாட்களில் தான் நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு நேரடியாக வருவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாட்களில் முன்னோர்களுக்கு திதி, தர்பணம் கொடுப்பது அவர்களிடம் ஆசி பெறுவதற்கு நம்மை நேரடியாக கொண்டு சேர்க்கும். இதன்மூலம், நம்முடைய தீராத பாவங்கள் மற்றும் சாபங்களை நாம் விடுவித்து கொள்ளலாம்.
தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம், காலம் எப்போது?
தர்ப்பணம் கொடுக்கும் போது நேரம், காலம் முக்கியமான ஒன்றாகும். பொதுவான சூரியன் உதித்த பிறகு தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதேபோன்று, உச்சி காலத்திற்கு பிறகு தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. அதன்படி, ஒவ்வொரு அமாவாசை நாளிலும் தர்ப்பணம் கொடுக்கும் போது அன்று காலை 6 மணிக்கு மேல் துவங்கி 12 மணிக்குள் முடிக்க வேண்டும்.
நம்முடைய பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் வழங்கலாம். ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் போன்றவற்றையும் தானம் செய்யலாம். இதனால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் புண்ணியம் வந்து சேரும். வாழ்வில் அனைத்து செல்வங்களும் சேரும். மகிழ்ச்சியான வாழ்கை அமையும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். மேலும், பித்ருக்களின் முழு ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க….பூஜை அறையில் இருக்கும் போது, ஒருவர் மறந்தும் கூட செய்யக்கூடாத விஷயங்கள்..!