உடலுறவை பொறுத்தவரை நம்முடைய முன்னோர்கள் சொல்லி தந்த சில வழிகாட்டு முறைகளை கடைபிடிப்பது வழக்கம். மேலும், சினிமா காட்சியில் காட்டப்படுவது போல் நிஜத்தில் உடலுறவு இருக்கும் என்பது பெரும்பாலான மக்களின் புரிதலாக இருக்கிறது. ஆனால், உண்மையில் உடலுறவு பற்றி இன்றும் பலருக்கு முழு விவரம் தெரியாது. அந்த வகையில் உடலுறவு பற்றி நீங்கள் அசாதாரணமாக நினைத்து கொண்டிருக்கும் பல்வேறு சரியான விஷயங்களை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து வைத்துக் கொள்வோம்.
உடலுறவின் போது ஏற்படும் வலி:
உடலுறவின் போது சிலருக்கு வலி ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். ஆனால், இந்த வலி ஏற்படுவதற்கு சிலநேரம் பாலுறவு மூலம் பரவிய தொற்று நோய்களும் காரணமாக கூட இருக்கலாம். எனவே, இதனை அசாதாரணமாக நினைத்து கொண்டிருந்தால் பல சமயங்களில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
அந்தரங்க உறுப்பில் பிரச்சனை:
ஆணுறுப்பிலோ அல்லது பெண்ணுறுப்பிலோ ஒரு விதமான துர்நாற்றம் அல்லது மஞ்சள் நிறத்தில் திரவம் வெளியேறினால், அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
இரண்டு ஆணுறைகளை உபயோகிப்பது:
இரண்டு ஆணுறைகளை சிலர் பாதுகாப்பான உடலுறவு என்று நினைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் உபயோகிப்பது வழக்கம். ஆனால், உண்மையில் இவை கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பினை உங்களுக்கு அதிகரிக்கும். ஏனெனில், சில நேரம் இரண்டு ஆணுறைகள் பயன்படுத்தினாலும் மிக எளிதாக கிழிந்து விடக்கூடிய தன்மையைக் கொண்டவை ஆகும்.
வாய்வழி புணர்ச்சி:
வாய்வழி புணர்ச்சி என்பது பலரும் ஆரோக்கியமானது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் வாய்வழி புணர்ச்சியின் மூலம் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
பலரும் உடலுறவின் உச்சகட்ட நிலையில் உயிரணுக்கள் வெளியேறும் போது, அவற்றை பெண்ணுறுப்பில் செலுத்தாமல் வெளியே எடுத்து விட்டால் கர்ப்பம் தரிக்க இயலாது என்று எண்ணிக் கொண்டு உள்ளார்கள். ஆனால், உண்மையில் சில குறிப்பிட்ட விதமான உயிரணுக்கள் உயிரணுவை முழுவதுமாக வெளியேறுவதற்கு முன்பே ப்ரீ எஜாகுக்லேஷன் மூலம் வெளியேறி கர்ப்பம் தரிக்க வைத்து விடும்.