ஒவ்வொரு வீட்டிலும், நிலை வாசல் கதவு மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம்மில் பெரும்பாலோனோருக்கு வீடு கட்டும் கனவு இருக்கும். அப்படி, வீடு கட்டும் ஒவ்வொருவரும் வீட்டின் மற்ற அறைகளை காட்டிலும், வீட்டில் நிலை வாசல் கதவு வாஸ்து சாஸ்திரத்தின் படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வழக்கம். ஏனெனில், அப்போதுதான் லட்சுமி தேவியின் வாசம் வீட்டில், எப்போதும் நிறைந்திருக்கும், செல்வம் பெருகும். தரித்திரம் நீங்கும் என்று சொல்வார்கள்.
அப்படியாக வீட்டின் நிலை வாசல் கதவில் சில தவறுகளை செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், உங்களை பீடை பிடித்து ஆட்டும். நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்து பார்த்தாலும், துவங்கும் நல்ல காரியம் தடைபடும். வியாபாரத்தில் நஷ்டம் இருக்கும். அப்படியாக நீங்கள் என்னென்ன தவறுகளை தவிர்க்க வேண்டும் என்பது பற்றித்தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
நீங்கள் வாடகை வீட்டில் குடியேறினாலும் இந்த வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நீங்கள் சீக்கிரம் சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகும் யோகம் கிடைக்கும். முதலில் எப்போதும் உங்கள் நிலை வாசலில் படியில், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். சிலரது வீட்டில் விசேஷ நாட்களில் மட்டுமே இதனை கடைபிடிப்பார்கள். அப்படி இல்லாமல் எப்போதும், மஞ்சள் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோன்று, நிலை வாசலில் எப்போதும் மாவிலை தோரணம் கட்டி வைக்க வேண்டும். சிலர், அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்பதால், நிலை வாசலில் பிளாஸ்டிக்கில் மாவிலை தோரணம் கட்டி வைத்திருப்பார்கள். அப்படி ஒரு போதும் கட்டி வைக்கவே கூடாது. ஏனெனில், அது வீட்டில் தரித்திரம் உண்டு பண்ணும். எனவே, காய்ந்து போனாலும் பரவாயில்லை, மாவிலை தோரணம் கட்டி வைப்பது நல்லது.
அதேபோன்று, விளக்குமாறு, செருப்பு போன்றவற்றை எப்போதும் நிலை வாசல் படியில் போட்டு வைக்க கூடாது. அதற்கென வைக்கப்பட்ட செருப்பு ஸ்டாண்டில் மட்டுமே போட்டு வைக்க வேண்டும். மேலும், வீட்டிற்குள் செருப்பு போட்டு வைக்கும் பழக்கமும் நல்லது கிடையாது.
அதேபோன்று, மாலை நேரங்களில் விளக்கை ஏற்றி வைக்கும் போது, கதவை திறந்து வைக்க வேண்டும். அப்போது தான் லட்சுமி தேவி நம்முடைய வீட்டில் வாசம் செய்வாள். வறுமையை விலகி, பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும். எனவே, இனிமேல் ஒவ்வொருவரும் வீடு கட்டும் போதும் வீட்டில் குடியேறும் போதும், மகிழ்ச்சியுடன், சந்தோஷமாக வாழ்வதற்கு இந்த முறைகளை பின்பற்றி பார்க்க வேண்டும்.