Parikaram to get Money: நம்மில் பெரும்பாலானோர் கடன் தொல்லையால் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இதற்கு அதிக பேராசை முக்கிய காரணமாக உள்ளது. முதலில், நம்மில் அதிகம் பேருக்கு இருப்பதை வைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. கடன் வாங்கியும், ஆடம்பர வாழ்கை வாழ்வதற்கு ஆசை படுகிறார்கள். இப்படி, எல்லா தேவைக்கும் கடன் வாங்கி வாழ வேண்டும் என்ற மனநிலையை நாம் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். இருப்பதை வைத்து வாழ்வதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி, நம்முடைய வீட்டில் கடன் அதிகரிப்பதற்கு வீட்டின் வாஸ்து, சாஸ்திரங்களும் ஒருவித காரணமாக இருக்கலாம், அவை என்னென்ன என்பதை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
கடன் தொல்லை அதிகரிக்க, நம்முடைய வீட்டில் இருக்கும், தங்கள் வெள்ளி பொருட்களும் ஒருவித காரணமாக இருக்கலாம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..? ஆம், செல்வம் மற்றும் புகழை கொண்டு வந்து சேர்க்கும் தங்கமும், வெள்ளியும் வீட்டில் கடன் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்…? அதற்கான விளக்கம் நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
அதற்கு, நம்முடைய வீட்டில் இருக்கும் குண்டுமணி அளவு வெள்ளி பொருட்களை கூட நாம் கருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு வெள்ளி பொருட்களை சுத்தமாக தேய்த்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இது குடும்பத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும். கணவன் – மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்தும். எப்போதும், மனதில் ஒருவித பயம், பதற்றத்தை அதிகரிக்கும். குறிப்பாக, சுமங்கலி பெண்கள் இந்த விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
அதேபோல், நீங்கள் தங்கம் அணிந்து வெளியே சென்றால் அந்த பொருட்களின் மீது மற்றவர்களின் கண் திருஷ்டி இருக்கும். எனவே, இந்த நெகட்டிவ் எனர்ஜி விலகி வீட்டில் பாசிட்டிவ் சக்தி அதிகரிக்க இந்த வழிமுறையை பின்பற்றுவது அவசியம். அதற்கு நீங்கள், பயன்படுத்தும் தங்க நகைகளை மாதம் ஒருமுறை உப்பு நீரில் அலசி பிறகு அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு கண் திருஷ்டி கழிந்து, கடன் குறையும். வீட்டில் லட்சுமி தேவியின் வருகை இருக்கும். பொன், பொருள் சேரும் யோகம் கிடைக்கும். ஒரே வருடத்தில் நீங்கள், கோடீஸ்வரர் ஆகலாம். இந்த இரண்டு பரிகாரங்களையும், நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருவதால், உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்கை அமையும்.