Thalapathy68: லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்து வரும் தளபதி 68 படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
ஏஜிஎஸ் 25-வது திரைப்படத்தில் தளபதியுடன் கூட்டணி:
‘பிகில்’ படத்தின் வெற்றிக்கு பின்னர், தன்னுடைய 25-வது திரைப்படத்திற்காக பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், தளபதி விஜய்யுடன் இணைத்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் தளபதி 68:
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தில், தளபதிக்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்துள்ளனர். இதன் பூஜை வீடியோ மற்றும் போட்டோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க…விஜய் கேரியரில் முதல் நாள் வசூலில் 100 கோடியை கடந்து…புதிய சாதனை படைத்த லியோ..!
சமீபத்தில், இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டு ஷூட்டிங் துவங்கிய நிலையில், விஜயதசமியை முன்னிட்டு அதன் பூஜை வீடியோவை படக்குழு இன்று 12 மணிக்கு வெளியிட்டுள்ளது.
தளபதி 68ல் பல முன்னணி சினிமா பிரபலங்கள்:
இந்த பூஜையில் விஜய், வெங்கட் பிரபு, பிரசாந்த், விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, ஜெயராம், யோகி பாபு பிரபு தேவா, மோகன், லைலா, யுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த படத்தில், சினேகா மற்றும் லைலா முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள்.
21 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்த லைலா:
மேலும், இந்த படத்தில், 21 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் லைலா இணைத்துள்ளார். கடந்த 2002இல் வெளியான உன்னை நினைத்து படத்தில் முதலில் சூர்யாவிற்கு பதில் விஜய் தான் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார்.
இருப்பினும், இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக விஜய் பாதியில் விலகிவிட்டார். இறுதியில், அந்த கதாபாத்திரத்தில் சூர்யா ஏற்று நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க…விஜய் கேரியரில் முதல் நாள் வசூலில் 100 கோடியை கடந்து…புதிய சாதனை படைத்த லியோ..!