Sharing is caring!

ருத்ராட்சம் மணிகளில் ஒன்றிலிருந்து இருபத்தொன்று முகங்கள் வரை உண்டு. ஒவ்வொன்றும் ஒருவிதமான பயன்கள் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த ருத்ராட்சம் மாலைகளை எப்போதும் ஒற்றை படையில் அணிதல் நல்லது.

ருத்ராட்சம் துறவிகள் மட்டுமே அணிய வேண்டும். ருத்திராட்சத்தை திருமணம் ஆனவர்கள் அணிதல் கூடாது, மாதவிடாய் காலங்களில் பெண்கள் அணியக்கூடாது என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது.

இந்த ருத்திராட்சத்தை யாரெல்லாம் அணியலாம் என்பதை பற்றிய சத்குருவின் விளக்கத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

இந்த ருத்ராட்சம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில், தாம்பத்யத்தில் இருக்கும் போது, திதி கொடுக்கும் போதும் அணிந்து கொள்ளலாம். இவை மூன்றும் இயற்கை நிகழ்வு என்பதால் இவற்றிற்கு எந்த தடையும் கிடையாது.

ஆனால், அதே நேரம் ருத்ராட்சம் அணிந்து கொண்டு மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வீடு இடம் மாறும் போதும், பயணம் மேற்கொள்ளும் போதும் புதுவிதமான இடங்களில் சிலருக்கு தூக்கம் என்பது வாராது. இது போன்ற நேரங்களில் ருத்ராட்சம் கழுத்தில் இருந்தால், நிம்மதியான உறக்கம் ஒருவருக்கு கிடைக்கும்.

ருத்ராட்சம் துறவிகளுக்கு மட்டுமா..?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த ருத்ராட்சம் அணியலாம். சிறுவர்களுக்கு கல்விக்கு தேவையான அறிவு வளர்ச்சிக்கு ருத்ராட்சம் உதவுகிறது. அதுமட்டுமின்றி, திருமணம் ஆன பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை இது வழங்குகிறது.

மேலும் படிக்க….Rudraksha Benefits: ருத்ராட்சம் அணிவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? சத்குரு கூறும் விளக்கம்…!

ருத்ராட்சம் எப்படி அணிய வேண்டும்..?

ருத்ராட்சம் மணிகளை தங்கம் அல்லது வெள்ளி கம்பி கொண்டு நீங்கள் கோர்க்கும் போது, அவற்றின் இறுதியில் பாதுகாப்பிற்காக வளையம் பயன்படுத்தப்படுகிறது. சில சமயம் நீங்கள் கம்பி பயன்படுத்தும் போது, ருத்ராட்சம் உள்ளே விரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவற்றால் ருத்ராட்சம் அணிவதன் மூலம் கிடைக்கும் முழு பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே, எப்போதும் ருத்ராட்சம் மணிகளை பட்டு அல்லது பஞ்சு நூல் கொண்டு கோர்ப்பது நல்லது. மேலும், இதனை, 6 மாத்திற்கு ஒருமுறை மாற்றி கொள்ளலாம். ஆனால், ஒருபோதும் கருப்பு நூல் கொண்டு ருத்ராட்சம் அணிதல் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க….Rudraksha Benefits: ருத்ராட்சம் அணிவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? சத்குரு கூறும் விளக்கம்…!

(Visited 130 times, 1 visits today)

Sharing is caring!