
Sani Peyarchi 2023: நீதியின் கடவுளான சனி பகவான் அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப தண்டனையோ, நற்பலன்களையோ உடனுக்குடன் கொடுத்து பழக்கப்பட்டவர். சனி பகவான் ஒருவர் மீது கருணை மழை பொழிய துவங்கிவிட்டால், அவரால் எல்லையற்ற செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும். கும்ப ராசியில் தற்போது, பயணம் செய்து வரும் சனியால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ யோகம் கூடி வரப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

சிம்மம்:
சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு, திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். நண்பர்கள், பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கும். உங்கள் பூர்வீக வீட்டை சீரமைத்து கட்டுவீர்கள். நீண்ட நாட்கள் மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.வீடு, சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும்.

கன்னி:
வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். உங்கள் கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்கவும். எதிலும் அவசரம் கூடாது. பண வரவு அதிகரிக்கும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி உறுதி. தாய் வழி உறவு வலுப்படும்.

தனுசு:
இன்று நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. குடும்பத்தினரை பற்றி யாரிடமும் குறை கூற வேண்டாம். அடுத்தவர் பிரச்சனையில் தலையிட வேண்டாம். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். எதிலும், நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.