Early pregnancy symptoms: உங்கள் ‘பிரக்னென்ஸி டெஸ்ட்டில்’ பாஸிட்டிவ் என்று வந்தால் நீங்கள் கர்ப்பம் என்று அர்த்தம். இந்த ”பிரக்னென்ஸி டெஸ்ட் கிட்” உங்கள் அருகில் இருக்கும் அனைத்து மெடிக்கல் கடைகளிலும் கிடைக்கும். இதனை வைத்து நீங்கள் தாய்மை அடைந்து விட்டீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் கர்ப்பமாக இருப்பதை துல்லியமாக கண்டறிய, மாதவிடாய் காலம் தள்ளிப்போன, 35 முதல் 40 நாட்களில் இந்த டெஸ்ட் எடுக்க வேண்டும.
இருப்பினும், பல பெண்களுக்கு பல வாரம் வரையிலும் அவர்களின் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் தெரிவது கிடையாது. ஆனால், ஒரு சில பெண்கள் தான் கர்ப்பம் தரித்துள்ளோம் என்பதை சில அறிகுறிகளை வைத்து முன் கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். அவை என்னென்ன அறிகுறிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மார்பகங்களில் அழுத்தம்:
மார்பக நிப்பலின் பக்கத்தில் கறுப்பாக அடைபோன்று தோன்றும். மேலும், அது பெரிதாகும். கர்ப்ப காலத்தில். இது சாதாரணமாக ஏற்படக்கூடியது. மேலும், சருமத்தின் நிறம் மாறுவதற்கு காரணம் உங்கள் உடலில் பிரக்னென்ஸி ஹார்மோன் வேலை செய்ய துவங்குவதே ஆகும்.
இலகுவான பிறப்புறுப்பு:
மாதவிடாய் காலத்தில் உங்களின் பிறப்புறுப்பு மிகவும் இலகுவாக இருக்கும். மேலும், அதை தொட்டால் வலி அதிகமாக இருக்கும். சில சமயம் அதிலிருந்து மெல்லிய திரவ கசிவு வெளியேறும்.
கறை:
கருவானது கர்ப்பப்பை சென்று அடைகின்ற சமயத்தில் பல பெண்களுக்கு மெல்லிதான கசிவு ஏற்படும். இது உங்களின் மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் நிறத்தில் இருப்பதை போல் மெல்லிய ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்:
கர்ப்பம் தரித்த இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகு நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும்.
களைப்பு:
உடல் முழுவதும் எப்போதும் ஒருவித களைப்பு தோன்றும். உங்களின் முழு எனர்ஜி குறைந்து விடும். மேலும், நீங்கள் சோர்வாக இருப்பீர்கள்.
வாந்தி:
கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தி அதிகமாக இருக்கும். சாதாரணமாக இது கர்ப்பம் தரித்த ஆறாவது வாரத்தில் துவங்கும்.
நுகரும் தன்மை:
சில கர்ப்பிணி பெண்களுக்கு நுகரும் தன்மை அதிகமாக இருக்கும். வெகு சீக்கிரத்திலேயே நல்ல மற்றும் கெட்ட வாசனையை நுகர்ந்து விடுவீர்கள்.
வயிறு உப்புதல்:
வயிறு உப்புவதை போன்ற தோற்றம் அளிக்கிறதா..? சிசுவின் வளர்ச்சி காரணமாக வயிறு உப்புகின்றது. ஆரம்பத்திலேயே மிக குறைந்த அளவிலேயே வயிறு உப்பும்.
உடல் வெப்பநிலை அதிகரித்தல்:
உங்களின் தெர்மாமீட்டர் கொண்டு நீங்கள் உடல் வெப்பநிலையை தினமும் கணக்கீட்டால் 1 டிகிரி உங்களின் உடல் வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.
மாதவிடாய் வருவதில்லை:
மாதவிடாய் எப்போதும் உங்களுக்கு சரியான தேதியில் வந்துவிடும். ஆனால், இந்த முறை மாதவிடாய் உங்களுக்கு சரியான தேதியில் வராமல் தள்ளிப்போய் விட்டால், நீங்கள் கர்ப்பம் என்று உறுதி செய்து கொள்ளலாம். பிறகு அருகில் இருக்கும் பெண்கள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். மருத்துவர் ரத்த பரிசோதனையின் மூலம் நீங்கள் கர்ப்பம் என்பதை உறுதிப்படுத்துவார்.
மேற்சொன்ன விஷயங்கள் உங்களின் அறிகுறிகளுடன் ஒத்து இருந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!