Sexual problems: இந்திய சமையல் அறையில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும், மசாலா பொருட்களில் ஒன்றாக இஞ்சி இருக்கிறது. இதன் தனிப்பட்ட சுவை மற்றும் மணம் காரணமாக மற்ற பொருட்களில் இருந்து இது தனித்து காணப்படுகிறது. மேலும், பல்வேறு மருத்துவத்திலும், இஞ்சிக்கு முக்கிய இடம் இருக்கிறது. இதனால் உடலும், மனமும் நல்ல நலமுடன் இருக்கும்.
இஞ்சியில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவதால் பல நோய்கள் குணமாகும். இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆண்களின் பாலியல் ஆசையை தூண்டும் ஒரு பொருளாக இஞ்சி உள்ளது. ஆம், பாலியல் உறவில் பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை எடுத்து தட்டி பாலுடன் கலந்து குடித்தால் போதும், நீங்கள் உறவில் வலுமையாக இருக்க முடியும்.
தலைவலி நீங்கி ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இஞ்சி சிறந்த உணவு பொருளாக உள்ளது.
வயிற்றுப்போக்கு நீங்கி, மலசிக்கல் பிரச்சனை நீங்கி செரிமானம் சீராக இயங்குவதற்கு இஞ்சி உதவியாக இருக்கிறது.
இஞ்சியை எடுத்து, தட்டி பாலுடன் கலந்து குடித்தால் இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும், அடிவயிற்று பிரச்சனையை முற்றிலும் குணமாக்க இஞ்சி உதவுகிறது.
இஞ்சியை சாற்றினை, ஒரு டீஸ்புன் தேன் கலந்து குடித்து வந்தால் தொப்பை குறையும். இஞ்சி சாறு குடிப்பதின் மூலம் உடலின் பெருங்குடல், சிறுகுடல் போன்றவை சுத்தப்படுத்தப்படுகிறது.
உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இஞ்சி உதவுகிறது. பல்வேறு நோய்கிருமிகளிடமிருந்து, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.
வாரத்தில் இரண்டு முறை இஞ்சி டீ குடித்து வந்தால், மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படாமல் இருக்கும்.
நீண்ட நேரம் பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வராமல் தடுக்க இஞ்சி டீ உதவுகிறது. மேலும், இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் நம்மை பாதுகாப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இஞ்சி உதவுகிறது.