Lemon peel benefits: நம்முடைய வீடுகளில் எலுமிச்சை பழத்தை வாங்கி பயன்படுத்திய பின்னர், அதன் தோலை குப்பையில் தூக்கி எறிவது வழக்கம். அப்படி, நாம் குப்பையில் தூக்கி எறியும் எலுமிச்சை பழத்தின் தோலை பல்வேறு வழிமுறைகளில் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா..? அப்படியாக, இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள சில முக்கிய குறிப்புகளை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை தோலில் இருக்கும் சத்துக்கள்:
எலுமிச்சை தோலில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை நமக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
எலுமிச்சை பழத்தின் தோலை எடுத்து சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் எடை குறையும். கொலஸ்ட்ராலலை எரிக்க மற்றும் மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாப்பாக வைக்கும்.
முகம் ஜொலிக்க வைக்கும்:
எலுமிச்சை பழத்தின் தோலை முகத்தில் தேய்த்து கொண்டால், பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.
வீட்டு உபயோக பயன்பாடு:
நீங்கள் சமையலறையை மேடையை சுத்தம் செய்ய விரும்பினால், பேக்கிங் சோடாவை எலுமிச்சை பழத்தோல்களில் தொட்டு, தேய்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளலாம்.
கரி பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய, பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி லிக்விட் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் பாத்திரத்தை இரும்பு கம்பி கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். அப்படி செய்தால் அடி பிடித்த பாத்திரம் கறை அனைத்தும் சுலபமாக போய் விடும்.
வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்களை எலுமிச்சை தோலுடன், பீதாம்பரி சேர்த்து தேய்க்கும் போது எண்ணெய் பிசுக்குகள் நீங்கி சுத்தமாகி விடும். பூஜை பாத்திரம் புதியது போல் ஜொலிக்கும்.
எலுமிச்சை தோலை நீரில் கொதிக்க வைத்து அதில் லிக்விட் மற்றும் வினிகர் தலா 5 டீஸ்புன் சேர்த்து ஸ்பிரே பாட்டில் சேமித்து வைத்துக் கொண்டால், அழுக்கான இடங்களை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும்.