Home remedy tips: வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லி, எறும்பு தொல்லை இருந்தால், நம்மிடம் எப்போதும் ஒருவித அலர்ஜியும், பயமும் இருக்கும். அதிலும், வீட்டில் தண்ணீர் பயன்பாடு அதிகம் இருக்கும் சமையல் அறை, பாத்ரூம் போன்ற இடங்களில் இவற்றில் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை வழங்கும், சமையல் அறையில் பல்லிகள் நடமாட்டம் இருப்பது, மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
இது இரவில் நம்முடைய சமையல் அறை மேடை, கழுவி வைத்துள்ள பாத்திரம் போன்றவற்றில் எச்சங்களை விட்டு செல்லும். இதனால், மறுநாள் நாம் கழுவாமல் பயன்படுத்தும் பாத்திரத்தால், பல்வேறு உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் வந்து சேரும். சில நேரம் பல்லிகள் நம்முடைய உணவில் விழுந்து விட்டால், உயிருக்கு ஆபத்தாகவும் இருக்கும்.
எனவே, மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சி, பல்லி, எறும்பு போன்றவற்றை அடியோடு கொல்லும், முக்கிய குறிப்புகளை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளப்போகிறோம்.
டிப்ஸ் 1:
இதற்கு முதலில் முட்டையின் வெள்ளை கரு, போரிக் ஆசிட் பவுடர், கோதுமை மாவு போன்றவற்றை காலியான பவுலில் தலா இரண்டு டீஸ்புன் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு, இவற்றை சிறு உருண்டையாக உருட்டி கரப்பான் பூச்சு நடமாட்டம் எங்கெல்லாம் அதிகம் இருக்கிறதோ..? அந்த இடத்தில் எல்லாம் வைத்தால் போதும் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை முற்றிலும் ஒழியும்.
டிப்ஸ் 2:
அதேபோன்று, சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடா கலவையை கரப்பான் பூச்சிகள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவினால், அதன் வாசனை, கரப்பான் பூச்சிகளை வர விடாமல் தடுக்கும்.
டிப்ஸ் 3:
அதேபோன்று, பிரியாணி இலை மற்றும் கிராம்பு போன்றவற்றை பொடி செய்து, கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் இரவில் தூங்கும் முன்பு தூவினால், அதன் நறுமணத்தால் கரப்பான் பூச்சி வராமல் இருக்கும்.
டிப்ஸ் 4:
அடுத்ததாக, முதலில் காலியான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், டெட்டாயில், எலுமிச்சை சாறு போன்றவற்றை ஒரு மூடி சேர்த்துக் கொள்ளுங்கள். அதில், பூண்டு மற்றும் வெங்காயம் நசுக்கியது ஐந்து பற்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். கூடவே புதினா இலைகள் நான்கைந்து சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு, இதனை வடிகட்டி காலியான ஸ்பிரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு கரப்பான் பூச்சி நடமாட்டம் எங்கெல்லாம் இருக்கிறதோ..? அந்த இடங்களில் எல்லாம் பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி இந்த மருந்தை வைத்துவிட்டால் போதும் இதன் வாசத்திற்கு கரப்பான் பூச்சிகள் பல்லி போன்றவை வந்து எட்டி கூட பார்க்காது. நிச்சம் இந்த குறிப்பினை பின்பற்றி பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.
டிப்ஸ் 5:
இதனை தவிர்த்து, நாப்தலின் உருண்டை வாங்கி வைத்து கொள்ளுங்கள். இதனை பூச்சிகள் நடமாட்டம் எங்கெல்லாம் இருக்கிறதோ..? அந்த இடத்தில் எல்லாம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த குறிப்புகளை எல்லாம் பின்பற்றினால் போதும், உங்களின் வீடும், உடலும் நலமுடன் இருக்கும்.