Health drink to reduce belly fat: இன்றைய நவீன காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொலஸ்ட்ரால் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கு நம்முடைய உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்கை முறை மாற்றம் முக்கிய ஒன்றாக உள்ளது. ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பது நாளடைவில், உடல் எடை அதிகரிப்பு, நீரழிவு, இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும். எனவே, கொலஸ்ட்ரால் பிரச்சனையை எதிர்கொள்ள, உடல் எடையை கட்டுக்குள் வைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக ஜிம்மிற்கு படையெடுக்கின்றனர். இருப்பினும், சில நேரம் இதனால் எந்த பயனும் இல்லாமல் போகிறது. எனவே, இந்த கோடை காலத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையை இயற்கை முறையில் எதிர்கொண்டு, உடல் எடையை கட்டுக்குள் வைக்க தினமும் இந்த ஒரு பானம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு தேவையான உதவி குறிப்புகளை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சை பானம்:
இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானம் பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பு நீக்கி நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
வெந்தயம் டீ:
வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடல் எடையை குறைத்து, கெட்ட கொழுப்பை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வெயில் காலத்தில் உடலின் வெப்பநிலையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சப்ஜா பானம்:
தினமும் காலையில் 1 டீஸ்பூன் சப்ஜா விதைகள் எடுத்துக் கொள்வது தொப்பையை குறைத்து, உடலுக்கு நல்ல பலனை தரும்.
கிரீன் டீயுடன், புதினா பானம்:
கிரீன் டீயுடன், புதினா இலைகள் சேர்த்து பருகுவது உடலில் தொப்பையை குறைத்து, செரிமான அமைப்பை சீராக்க உதவும். அத்துடன் உங்களின் உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கும்.
தனியா விதைகள் மூலம் தயாரிக்கப்படும் பானம், கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு நேரம் இந்த பானத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தயாரிக்கும் முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் தலா 1 டீஸ்பூன் தனியா விதைகள் மற்றும் சோம்பு சேர்த்து தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பருக வேண்டும்.
இதையும் படியுங்கள்: வெயிலுக்கு இதமான குளுகுளு ஜூஸ் ..தினமும் எப்படி எடுத்துக்கணும் தெரியுமா..?