Guru Peyarchi 2023: குரு பகவான் செல்வம், புகழ், கல்வி அறிவு மற்றும் மகிழ்ச்சியின் கடவுளாக இருக்கிறார். ஒருவரது ஜாதகத்தில், குரு வலுவாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், குருவின் பார்வை பட்டாலே, நீண்ட நாள் விலகாத தோஷமும் விலகி போகும். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு பகவான் மேஷ ராசிக்குள் நுழைந்தார். இதையடுத்து, குருபகவான் இந்த ஆண்டு முழுவதும் அதே ராசியில் இருப்பார். இதனால், குறிப்பிட்ட சில ராசிக்கு இந்த ஆண்டு முழுவதும் சுப பலன்கள் கிடைக்கப்போகிறது. அந்த அதிர்ஷ்டம் நிறைந்த 5 ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேஷம்:
குருவின் இருப்பிடம் மேஷம் ராசியில் இருப்பதால், உங்களுக்கு அமோக வெற்றி கிடைக்கும். வாழ்வில் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தொழிலில் வெற்றிகள் குவியும். நீண்ட நாள் எதிர்பார்த்த திட்டம் நிறைவேறும். வாழ்வில் வளம் பெருகும். வெளியூர் பயணம் செல்வீர்கள். உங்களின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமண யோகம் கிடைக்கும்.
சிம்மம்:
குருவின் மாற்றம் சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு அமோகமாக இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும். இந்த நேரத்தில் உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். வெளி இடங்களில் மரியாதை கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பணி இடத்தில் மரியாதை கூடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். வேலையில் ஊதிய உயர்வு உண்டாகும். வியாபாரம் துவங்கும் யோகம் உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்குகுருவின் மாற்றத்தால், திடீர் பணவரவு உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பணி இடத்தில் அதிக கவுரமும், நல்ல பெயரும், ஊதிய உயர்வும் கிடைக்கும். சுயதொழில் லாபம் தரும். ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும்.
கும்பம்:
கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே உறவு பலப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். திருமண யோகம் கிடைக்கும்.