வீட்டில் வைத்துள்ள மசாலா பொருட்களின் எறும்புகள், வண்டுகள் வராமல் பாதுகாப்பது எப்படி என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
இந்தியாவின் பல்வேறு வீடுகளில் மசாலா பொருட்கள், சைவம் மற்றும் அசைவம் உணவுகளின் சுவை மற்றும் நறுமணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், வானிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் மசாலா பொருட்கள் மிக எளிதில் கெட்டுப் போய் விடுகிறது. எனவே, மசாலா பொருட்களை சரியான முறையில் பராமரிப்பது எப்படி என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளப்போகிறோம்.
மேலும் படிக்க…இல்லத்தரசிகளுக்கு தேவையான புத்தம் புதிய பெஸ்ட் 6 கிச்சன் டிப்ஸ்..!
காலாவதி தேதியை சரிபார்க்கவும்:
மல்லிகை கடைகளில் வாங்கும் மசாலா பொருட்களுக்கு காலாவதி தேதி என்பதே கிடையாது. ஆனால், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கும் மசாலா பொருட்களில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே, காலாவதி தேதியை சரிபார்த்து வாங்கவும்.
மேலும் படிக்க…இல்லத்தரசிகளுக்கு தேவையான புத்தம் புதிய பெஸ்ட் 6 கிச்சன் டிப்ஸ்..!
பேக்கிங்கில் வாங்கும் சில மசாலா பொருட்களை காலாவதி தேதி முடிந்த பிறகும் சில நாட்களுக்கு பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு கிடையாது. ஆனால், மசாலா பொருட்களில் இருந்து ஒரு விதமான கெட்ட வாடை வந்தாலும், ஒருவேளை பாட்டில்களில் வண்டுகள், பூச்சிகள் வந்து விட்டால், அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
அதேபோல், மசாலா பொருட்களில் ஈரப்பதம் வந்துவிட்டால், அதனை அப்புறப்படுத்த சரியான காலம் வந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மசாலா பொருட்கள் கெட்டுப்போவதை தடுக்க, எப்போதும் காற்றுபுகாத கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைக்க வேண்டும். மேலும், மசாலா பொருட்களை உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.
மசாலா பொருட்களை மொத்தமாக வாங்கி வைக்காமல், மாதம் ஒருமுறை வாங்கி பயன்படுத்தலாம்.
எனவே, எப்போதும் மசாலா பொருட்களை ஈரமில்லாத, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்க வேண்டும்.
மசாலா பொருட்களின் தரம், சரியான முறையில் இருக்க அதனை கடையில் இருந்து வாங்கி வரப்பட்ட பாக்கெட்டில் வைத்து, பயன்படுத்தலாம். மசாலா பொருட்களை அடிக்கடி காய வைத்து பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க…இல்லத்தரசிகளுக்கு தேவையான புத்தம் புதிய பெஸ்ட் 6 கிச்சன் டிப்ஸ்..!