இந்திய குடும்பங்களில் மாமியார், மருமகள் பிரச்சனை என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். திருமணமாகி கணவன் வீட்டிற்கு வரும் பெண்கள், குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இதனால், ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தின் வழக்கத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அப்படியாக, உங்கள் மாமியார் உங்களை கட்டுப்படுத்துகிறார் என்பதை உணர்த்தும் 5 காரணங்கள் என்ன என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
கருத்துக்களை வெளிப்படுத்துதல்:
உங்கள் மாமியாரால் நீங்கள் உணர்ச்சி ரீதியாக கட்டுப்படுத்தப்படுவதற்கு, முதலில் உங்களின் சொந்த கருத்துக்களை வெளிப்படுத்த முடியாமல் இருக்கும். அதேபோன்று, உங்கள் மாமியாரிடம் கலந்தாலோசிக்காமல் எந்தவிதமான தனிப்பட்ட முடிவுகளையும் உங்களால் எடுக்க முடியாது. மேலும், எந்தவித முக்கிய முடிவுகளையும் எடுப்பதற்கு முன் உங்கள் மாமியாரின் ஒப்புதல் அவசியம் இருக்கும்.
தீர்க்கமான ஆலோசனைகளை வழங்குதல்:
உங்கள் மாமியார் உங்களுக்கு அடிக்கடி ஆலோசனைகளை வழங்க முயற்சிப்பதை நீங்கள் கவனிக்கலாம். அதேபோன்று, நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிட முயற்சி செய்வார்கள். எப்போதும், உங்கள் சொந்த கருத்துக்கள் மற்றும் முடிவுகளுக்கு அவர்கள் செவி சாய்க்க வேண்டும். அவர்கள் தங்கள் முடிவுகளை உங்கள் மீது திணிக்கக் கூடாது.
குற்ற உணர்ச்சியாக இருத்தல்:
உங்கள் மாமியார்களின் விருப்பங்களையோ அல்லது எதிர்பார்ப்புகளையோ நீங்கள் பின்பற்றவில்லை என்றால் ஒருவிதமான குற்ற உணர்ச்சி மனதில் தோன்றும். உங்கள் சொந்த முடிவுகளை நிச்சயம் நீங்கள் எடுக்கலாம். இதற்காக நீங்கள் வெட்கப்படவோ அல்லது குற்ற உணர்ச்சியாகவோ உணர வேண்டியதில்லை.
எதிர்மறை மற்றும் விமர்சனம்:
உங்கள் மாமியார் உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் செயல்களைப் பற்றியோ அடிக்கடி எதிர்மறையான கருத்துகள் அல்லது விமர்சனங்களை செய்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மாமியார் உங்கள் விருப்பங்களை பற்றி அடிக்கடி விமர்சிக்கலாம், இழிவுபடுத்தலாம் அல்லது எதிர்மறையான கருத்துகளை கூறலாம். அவர்கள் உங்கள் செயல்களை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால், நீங்கள் எப்போதும் துணிச்சலுடன், தைரியமாக இருத்தல் அவசியம்.
உணர்ச்சி ரீதியாக கையாளுதல்:
இந்த வகையான கையாளுதலை எளிதில் அடையாளம் காண முடியாது. ஆனால் உங்கள் மாமியார் உங்களை குற்ற உணர்வு, அச்சுறுத்தல் அல்லது உணர்ச்சி ரீதியாக அச்சுறுத்த முயற்சித்தால், நீங்கள் அவர்களால் உணர்ச்சி ரீதியாக கட்டுப்படுத்தப்படுகிறீர்கள் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். எனவே, இந்த முறையில் நீங்கள் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும்.