Health benefits of eating sprouted Grains: சாதாரண பயிறுகளை விட காலை உணவாக முளைக்கட்டிய பயிறு சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தரும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கருதுகிறார்கள். அதுமட்டுமின்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முளைகட்டிய பயிறு முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது பாரம்பரிய உணவான முளைகட்டிய பயிரில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
முளைகட்டிய பயறுகளில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
முளைகட்டிய பயறுகளில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து நீண்ட நேரம் பசி ஏற்படாமல் உங்களை கட்டுக்குள் வைக்கும். எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது.
முளைகட்டிய பயிறு வயிற்றில் pH அளவை சீராக வைத்து அமிலத்தன்மையைக் குறைக்கிறது.
கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, பொடுகு மற்றும் இளநரை பிரச்சனையை சரிசெய்ய முளைகட்டிய பயறுகள் உதவியாக இருக்கும்.
முளைகட்டிய பயிறு வகைகள் ரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும், ஹார்மோன்கள் சீராக வைக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க…Breastfeeding Benefits: தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு கிடைக்கும் 8 நன்மைகள்…!
பயறுகளை முளைக்கட்ட வைக்கும் முறை:
சுண்டல், பச்சை பாசிப்பயறு, தட்டைப்பயறு மற்றும் மொச்சைப்பயறு ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒன்றை எடுத்து 5 முதல் 6 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, உங்கள் வீட்டில் இருக்கும் அப்பளம் பொரித்து வைக்கும் ஓட்டை பாத்திரத்தில் பயிரை எடுத்து கொட்டி நீரை வடிகட்ட வேண்டும்.
பிறகு அந்த பாத்திரத்தின் மேல் ஒரு காட்டன் துணி கொண்டு இரவு முழுவது மூடி வைக்க வேண்டும். இல்லையென்றால், ஊறிய பயறுகளை, ஒரு பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை அதனை எடுத்து குலுக்கி விட வேண்டும். இதையெடுத்து, காலையில் எழுந்து பார்த்தால் பயிறு முழுவதும் முளைகட்டி இருக்கும்.
முளை கட்டிய பயறு வகைகளை பச்சையாகவோ அல்லது சாலட் செய்தோ சாப்பிடுவது நல்லது. இதனை தவிர்த்து சமைத்து சாப்பிட தேவையான செய்முறை விளக்கம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1
பட்டை மிளகாய் – 3
முளைகட்டிய பயிறு – 1 கப்
உப்பு -அரை டீஸ்புன்
கருவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் -2 டீஸ்புன்
கடுகு – 1 டீஸ்பூன்
தேங்காய் – துருவியது 1\2 கப்
செய்முறை விளக்கம்:
அடுப்பை பற்ற வைத்து கடாயில், எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு, கருவேப்பிலை, பட்டை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் ஒரு கப் முளைகட்டிய பயிறு அதனுடன் 1 டம்ளர் அளவு தண்ணீர், அரை டீஸ்புன் உப்பு, சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேக வைக்க வேண்டும்.
பிறகு ஒரு பத்து நிமிடம் கழித்து, அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து கிளறினால் உங்களின் சுவையான முளைகட்டிய பயிறு தயார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.