
செல்வம், புகழ், ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நல்ல மற்றும் தீய பலன்களை தருகிறார். கிரகங்களின் ராசி மாற்றம், நட்சத்திர பெயர்ச்சி 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது சிலருக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் தருகிறது. பொதுவாக எந்த ஒரு கிரகமும் வக்ர நிலையில் இருக்கும் போது, அதன் அசுப பலன்கள் அதிகரிக்கும். ஆனால், சுக்கிரன் வக்ர நிலையில் இருந்தால் அதன் அசுப பலன்கள் குறையும். அதன்படி, சுக்கிரன் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் சிம்மத்தில் அஸ்தமன நிலையில் இருக்கிறார். இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை அவர் அஸ்தமன நிலையில் அங்கேயே தங்குவார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகிறது. அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேஷம்;
திடீர் பண வரவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பணியில் முன்னேற்றம் இருக்கும். திருமண யோகம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
Guru Peyarchi 2023: குருவின் வக்ர பெயர்ச்சியால்.. இந்த ராசிகளுக்கு அளவில்லாத செல்வம் பெருகும்..!

ரிஷபம்:
ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டாகும். தாய் வழி உறவு வலுவாக இருக்கும். இருப்பினும், உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். எதிலும், கவனமுடம் இருக்க வேண்டியது முக்கியம். காதல் வாழ்கை அமோகமாக இருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ப வேலை கிடைக்கும்.

மகரம்:
வெளிநாட்டு வேலை உங்களுக்கு கிடைக்கும். எந்த தொழிலும் இரட்டிப்பு லாபம் உண்டாகும். கூட்டு தொழில் லாபம் தரும். எதிலும் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். உங்கள் பணி நன்றாக இருக்கும்.