
Vanitha Vijayakumar Brutal Attack: நடிகை வனிதா பிரதீப்பின் ஆதரவாளர் ஒருவரால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் பிரதீப் ஆண்டனி பதிவு வெளியிட்டுள்ளார்.
வனிதாவின் மகள் ஜோவிகா பங்கேற்பு:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் வனிதா விஜயகுமார். இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் வனிதா விஜயகுமார். இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.
வனிதா இன்ஸ்டாகிராம் பதிவு:
இந்த நிலையில், வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என்னுடைய பிக்பாஸ் விமர்சனத்தை முடித்தபின், இரவு உணவையும் முடித்துவிட்டு வீடு திரும்ப இருந்தேன். அப்போது, எனது காரை என்னுடைய தங்கை தங்கை சௌமியா வீட்டின் அருகே நிறுத்தி இருந்தேன்.

அப்போது, காரை எடுப்பதற்காக பார்க்கிங் சென்ற போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் என்னை தாக்கினர். அதில் அவர், ரெட் கார்டு கொடுக்குறீங்களா, நீ வேற அதுக்கு ‘சப்போர்ட்’ என கூறி முகத்தில் அடித்தார். வலியில் நான் கத்தினேன். பக்கத்தில் யாருமே இல்லை. அப்போது மணி இரவு 1 இருக்கும்.
உடனே நான் என் தங்கைக்கு போன் செய்து கீழே வரச் சொன்னேன். இதை தொடர்பாக போலீசில் கொடுக்கும் படி, அவள் என்னை வற்புறுத்தினால். ஆனால், நான் இந்த செயலில் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என கூறினேன். அதன்பின் நான் முதல் உதவி எடுத்துக்கொண்டேன்.
பிரதீப் ஆண்டனி பதிவு:

என்னை தாக்கிய மர்ம நபர் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறி பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக நடிகர், பிரதீப் ஆண்டனி தனது சமூகவலைத்தள பக்கத்தில் உங்களுக்கு இப்படி நடந்திருக்க கூடாது, நடந்ததுக்கும் எனக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை.
வனிதா மீது தாக்குதல் நடத்திய நபர்:

என்னுடைய சக போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை. என் பெயரை சொல்லி யார் இதை செய்தது என்று எனக்கு தெரியாது. இருப்பினும் நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நன்றாக ஓய்வு எடுக்க, ஜோவிகா புத்திசாலி, அவளால் அதை வெல்ல முடியும், அவளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று பதிவிட்டுள்ளார்.