Sharing is caring!

Lips Dry: வெயில் காலம் வந்துவிட்டாலே உடலில் நீர் சத்து இல்லாமல் வறட்சி ஏற்படும். இதனால், உதட்டில் புண்கள், வெடிப்பு, கருமை நிறம் தோன்றும். இதனால், உணவு உண்பதற்கு மிகவும் சிரமாக இருக்கும். அத்துடன் பொது இடங்களுக்கு செல்வதற்கே கூச்சமாக இருக்கும். உங்கள் வாழ்கை முறை, உணவு கட்டுப்பாடு மூலம் இவற்றை ஓரளவு குறைக்கலாம். இந்த வெயில் காலத்தில் உதட்டின் அழகை முழுமையாக பராமரிக்க தேவையான உதவி குறிப்புகள், இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை உங்கள் உதட்டினை சிவப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்.

மேலும் படிக்க….Beauty Tips For Face: முகத்தின் அழகை கெடுக்கும் பருக்கள்…நொடியில் நீக்க இந்த டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள்…!!

தேங்காய் எண்ணெய்:

உதட்டின் கருமை நீங்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி பாருங்கள். எந்த விதமான கெமிக்கல் இல்லாமல், இயற்கையில் தேங்காய் எண்ணெய் உதட்டினை ஈரப்பதமாக்கும் தன்மை கொண்டது.

எலுமிச்சையுடன் தேன்:

எலுமிச்சையுடன் தேன் கலந்து தடவி பாருங்கள். இவை உதட்டில் இருக்கும் கருமை நிறம் நீங்க உதவுவது மட்டுமல்லாமல், உதட்டினை பொலிவுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

கற்றாழை ஜெல்:

கற்றாழை வெயிலுக்கு அதிக குளிர்ச்சியை தருகிறது. இவை உதட்டில் இருக்கும் கருமை நிறத்தை போக்க உதவுவதுடன், சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.

மஞ்சள்:

மஞ்சளில் இருக்கும் ஆன்டி ஆக்சைடுகள் உதட்டின் கருமையை நீக்கி உதட்டிற்கு பளிச்சிடும் சிவப்பழகை தருகிறது.

பழங்களின் ஜூஸ்:

கேரட், மாதுளை, வெள்ளரி போன்ற பழங்களின் ஜூஸ், உதட்டில் இருக்கும் கருமை நிறத்தை போக்குவதுடன், வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

ரோஜா இதழுடன், தேன் சேர்த்துக் கொள்வது:

ரோஜா இதழுடன், தேன் சேர்த்து பயன்படுத்துவது அழகிற்கு அழகு சேர்க்க உதவும். மேலும், உதட்டிற்கு தேவையான ஈரப்பதத்தையும் தருகிறது.

மேலும் படிக்க….Beauty Tips For Face: முகத்தின் அழகை கெடுக்கும் பருக்கள்…நொடியில் நீக்க இந்த டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள்…!!

(Visited 28 times, 1 visits today)

Sharing is caring!