Peanuts Benefits: வேர்கடலையில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பான ஒரு உணவு பொருளாகும். இதனை பல்வேறு வழிமுறைகளில் உட்கொள்ளலாம். குறிப்பாக, இதனை ஊற வைத்து அதிகாலையில் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த ஒன்றாகும்.
ஊற வைத்த வேர்க்கடலை சாப்பிட்டால், என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
வேர்க்கடலை உடலுக்கு தேவையான இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் இதனை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவும். குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவும்.
இதயத்திற்கு நல்லது:
வேர்க்கடலை இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. வேர்க்கடலையில் நிறைந்துள்ள மெக்னீசியம் மற்றும் செம்பு போன்றவை இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. ஆம், வேர்க்கடலை இதய நோய் அபாயத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும், வேர்க்கடலையில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் நிறைந்துள்ளன.
செரிமானத்திற்கு நல்லது:
நார்ச்சத்து அதிகம் கொண்ட வேர்க்கடலை சாப்பிடுவது, செரிமானம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வேர்க்கடலை சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் பசியை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வேர்க்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க சிறந்த ஒன்றாக உள்ளது.
வலுவான எலும்புகள்:
எலும்புகளை வலுவாக வைக்க வேர்க்கடலை சாப்பிடுங்கள். இதில் நிறைந்துள்ள மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்புகளை வலுவாக வைக்கும்.
நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்:
வேர்க்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். காலையில் ஊற வைத்த வேர்க்கடலை சாப்பிடுவது ஒருவரின் இரத்த சர்க்கரை அளவை நாள் முழுவதும் கட்டுக்குள் வைக்கும். தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் நடத்திய ஆய்வின் முடிவில், வேர்க்கடலை தொடர்ந்து உட்கொள்வது, டைப் 2 நீரிழிவு நோய்க்கு எதிராக இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:
வேர்க்கடலை சாப்பிட்டால் புற்று நோய் அபாயத்தை குறைக்க உதவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேர்க்கடலையில் நிறைந்துள்ள புரதம் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவும். குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவும்.
சற்குரு கூற்றுப்படி, உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேர்க்கடலையை எந்தெந்த வழிமுறைகளில் பயன்படுத்தலாம், என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
செய்முறை விளக்கம்:
பீட்ரூட் துருவல், ஊற வைத்த நிலக்கடலை, இஞ்சித் துருவல், தேங்காய் பூ, எலுமிச்சை சாறு, தாளிதம், உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும். (இதனை வேக வைக்க தேவையில்லை.)
இதனை காலை அல்லது மாலை வேளையில் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதனால், செரிமானம் எளிமையான முறையில் நடப்பதற்கும், உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
பீட்ரூட் துருவல் போலவே, காரட் சாலட் தயார் செய்யலாம். ஊற வைத்த நிலக்கடலைக்கு பதிலாக, முளைக்கட்டிய பச்சை பயிறு சேர்த்துக் கொள்ளவும்.