
Beauty tips for face: உங்கள் முகம் எப்போதும் தேவதை போல் ஜொலிக்க, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவும் போது, முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும், உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு ஏற்படுவதை தடுக்கும். இது உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி வயதான தோற்றம் வராமல் பாதுகாக்கும். தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் கெட்டசெல்களை நீக்கி புத்துணர்ச்சியை தரும்.

வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு:
வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு கலவையைப் பயன்படுத்தவும். குளிப்பதற்கு முன் சம அளவு வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாற்றை ஒரு பவுலில் கலந்து உங்கள் முகத்தில் தடவவும். இதையடுத்து, 10 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், உங்கள் சருமம் பிரகாசமாக இருக்கும். மேலும், கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்கி, சருமத்தை பளபளப்பான அதே தோல் நிறத்தில் வைக்கும்.
பப்பாளி பேஸ் பேக்:

பப்பாளி, முகத்தில் இருக்கும் இறந்த சரும செல்கள் மற்றும் பிற அசுத்தங்களை நீக்கும். 1/4 கப் பப்பாளி, 1 டேபிள் டீஸ்பூன் அன்னாசிப்பழத்தின் சாற்றினை ஒரு பவுலில் கலந்து கொள்ளவும். பிறகு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்:
பாதம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதை, சூரிய காந்தி விதைகள், சோயா போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளவும்.
சாப்பிட வேண்டிய பழங்கள்:

மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பன்னீர், திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி போன்ற ஊட்டசத்துமிக்க பழங்கள் சாப்பிட வேண்டும். மேலும், வெண்ணெய், நெய், தயிர், பால், கேரட், பீட்ரூட் சாறுகள், குங்குமப்பூ பாலுடன் கலந்து குடிப்பதால் சருமம் பொலிவுற்று பளபளப்பாக காட்சியளிக்கும்.
தக்காளி பேஸ் பேக்:
முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு இருந்தால், தக்காளி பயன்படுத்தலாம். இது சருமத்தின் இயற்கையான பொலிவை தருகிறது.