Sharing is caring!

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் புணர்தல் என்பது இயல்பான ஒன்றாகும். மனித இனமும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. ஆம், இந்த உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் செக்ஸ் உணர்வு என்பது இருக்கும். ஆனால், பெரும்பாலானோர் அதனை வெளிப்படுத்த முடியாமல் கட்டுப்படுத்தி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இன்னும், சிலர் பாலியல் வன்புணர்வு போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இயற்கை அமைப்பில் செக்ஸ் உணர்வு ஏற்படுவது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். ஆனால், அதனை ஆரோக்கியமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

மேலும் படிக்க….உங்கள் துணை கள்ள உறவில் இருப்பது தெரியவந்தால், நீங்கள் செய்ய வேண்டியவை..!

மேலும் படிக்க…சுய இன்பம் நல்லதா ..? கெட்டதா..? மருத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம்..!

வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் செக்ஸ் டாய்ஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா..? இந்தியாவில் இதன் பயன்பாடு குறைவு என்றாலும், ஏராளமானோர் இதனை பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், இதனை எப்படி கடைக்கு சென்று வாங்குவது, தன்னுடைய ஆசைகளை எப்படி பிறரிடம் கூறுவது என்று தெரியாமல்.? தயக்கம் கொள்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், நம்முடைய சமூகம் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது கிடையாது. எனவே, செக்ஸ் டாய்ஸ் யாருக்கு அவசியம், இதன் பயன்பாடு என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

செக்ஸ் டாய்ஸ் யாருக்கு அவசியம்:

செக்ஸ் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனை பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் உணர்ச்சிகள் அதிகரித்து, மிகவும் எளிதில் உச்சக்கட்ட நிலை என்பதை அடைகிறார்கள். அதுமட்டுமின்றி, பாலியல் வன்புணர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த செக்ஸ் டாய்ஸ் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதே மருத்துவர்களின் ஒருமித்த கருத்தாகும்.

செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதின் நன்மைகள்:

திருமணம் ஆகாத பதின்ம வயது வாலிபர்கள் தங்கள் ஆசைகளை செக்ஸ் டாய்ஸ் மூலம் தீர்த்துக் கொள்ள முடிகிறது.

செக்ஸ் டாய்ஸ் என்பது, தன்னுடைய உணர்வுகளை அடக்கி வைக்காமல் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக செயல்படுகிறது. இந்த கருவியை நீங்கள் தனிமையில் மட்டுமின்றி, மனைவியுடன் சேர்ந்தும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க….உங்கள் துணை கள்ள உறவில் இருப்பது தெரியவந்தால், நீங்கள் செய்ய வேண்டியவை..!

பெண்களுக்கு வெஜினாவில் ஏற்படும் வலியை போக்கவும் செக்ஸ் டாய்ஸ் உதவுகிறது. இதனால் கணவன் – மனைவி இருவரும் உறவில் எந்தவிதமான இடையூறுகளும் இன்றி இன்பத்தை அனுபவிக்கலாம்.

ஆண்களும் சரி, பெண்களும் சரி சுய இன்ப பழக்கத்தை மேற்கொள்கிறார்கள். இதனால், சில நேரம் பல்வேறு தொற்றுகளுக்கு வழிவகுக்கும். செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவது, சுய இன்பம் பழக்கத்தை விட இருபாலருக்கும் உச்சகட்ட இன்பத்தை தருகிறது.

பெண்களுக்கான செக்ஸ் டாய்ஸ்:

பெண்ணுறுப்புகளுக்காவே தயாரிக்கப்பட்ட இந்த செக்ஸ் டாய்ஸ் கையடக்கம் முதல் கை நீளம் வரை பல வகைகளில் கிடைக்கிறது. இவை பார்ப்பதற்கு முட்டை அல்லது பாகற்காய் வடிவில் இருக்கும். இவை பெண்ணுறுப்பில் ஜி-ஸ்பாட் எனப்படும் பகுதியை உட்புறமாக உச்சமடைய செய்யும்.

ஆண்களுக்கான செக்ஸ் டாய்ஸ்:

ஆண்களுக்காக தயாரிக்கப்பட்ட செக்ஸ் ரிங் சிறிய வளைய வடிவில் இருக்கும். இவை பெரும்பாலும் ஆணுறுப்பில் பயன்படுத்தப்படுபவை. இதனை ஆணுறுப்பில் பொருத்தும் போது அதன் வேகத்திற்கு ஏற்ப கிளர்ச்சி என்பது ஏற்படும்.

இருபாலரும் பயன்படுத்தும் செக்ஸ் டாய்ஸ்:

மூன்றாவது வகையான ஸக்‌ஷன் எனப்படும் செக்ஸ் டாய்ஸ் ஆண் – பெண் ஆகிய இருபாலரும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இப்போது, நீங்கள் செக்ஸ் டாய்ஸ் வாங்க தயார் என்றால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில், ஒரு சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

ஆம், செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவது, ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால், அதனை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில் தான் சவால்கள் நிறைந்துள்ளது. எனவே, மேற்சொன்ன வழிமுறைகளை கடைபிடித்து, செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தி அளவற்ற இன்ப கடலில் நீந்துங்கள். இதன்மூலம் உங்களுக்கு செக்ஸில் உச்சகட்ட இன்பம் காத்திருக்கிறது.

மேலும் படிக்க…சுய இன்பம் நல்லதா ..? கெட்டதா..? மருத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம்..!

(Visited 24 times, 1 visits today)

Sharing is caring!