Rudraksha benefits: ருத்ராட்சம் மணிகள் சிவபெருமான் கண்களில் இருந்து உருவானதாக ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால், ஹிமாலய மலைப்பிரதேங்களில் வளரும் ஒருவித மரத்தின் கொட்டை தான், இந்த ருத்ராட்சம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ருத்ராட்சம் அறிவியல், ஆன்மீகம் ஆகிய இரண்டிலுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இவற்றை உடம்பில் அணிந்து கொள்வதின் மூலம் ஒருவிதமான பாசிட்டிவ் எனர்ஜி நமக்கு கிடைக்கிறது. இதனை சிவபெருமான் பக்தர்கள் விரும்பி அணிகிறார்கள்.
தீய சக்திக்கு எதிரான கவசம்:
ருத்திராட்சம் தீய சக்திக்கு எதிரான கவசமாக செயல்படுகிறது. இதனை அணிந்து கொள்வதன் மூலம் நாம் பாசிட்டிவ் எண்ணங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
நம்முடைய பாரம்பரிய வழக்கப்படி, ருத்திராட்சம் தவம் மேற்கொள்ள காட்டுக்கு செல்லும் முனிவர்கள் தங்களுக்கு தேவையான நல்ல மற்றும் தீமையான விஷயங்களை பற்றி அறிந்து வைத்துக் கொள்ள உதவியாக உள்ளது.
முனிவர்கள், சந்நியாசிகள் மற்றும் காட்டில் வசிக்கும் சத்துருக்கள் பயணத்தின் நடுவே தண்ணீர் அருந்துவதற்காக அருவிக்கு செல்லும் போது, அந்த தண்ணீரில் விஷம் இருக்கிறதா..? குடிப்பதற்கு உகந்த தண்ணீரா..? என்பதை அறிந்து வைத்து கொள்ள உதவுகிறது. ஆம், ருத்திராட்சம் மணிகளை எடுத்து அந்த நீரின் மேலே தொங்க பிடித்து பார்க்கும் போது, கடிகாரம் முள் சுற்றும் திசையில் சுற்றினால் அது குடிப்பதற்கு உகந்த நீர் என்று அறிந்து கொள்ள முடியும். ஒருவேளை, அது கடிகாரம் முள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுற்றினால் அது குடிப்பதற்கு உகந்த நீர் கிடையாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா..? ஆம், என்றால் வீட்டில் இருக்கும் உணவு பொருட்கள் வைத்தும் நீங்கள் சோதனை மேற்கொள்ளலாம்.
ருத்திராட்சம், வீட்டில் சமைக்க பயன்படுத்தும் உணவு பொருட்களை நெகடிவ் மற்றும் பாசிட்டிவ் என்று இரண்டு வகைகளாக பிரித்து வைத்துக் கொள்ள உதவுகிறது.
நெகட்டிவ் உணவு வகைகள்:
வெங்காயம், பெருங்காயம், பூண்டு, கத்தரிக்காய், காப்பி ,டீ மிளகாய் போன்றவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது கிடையாது. ஏனெனில், வெங்காயம், பெருங்காயம், பூண்டு போன்றவை மருந்து பொருட்கள் ஆகும். இவை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் மலசிக்கல், அஜீரண கோளாறு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
அதே போன்று, டீ, காப்பி போன்றவை நரம்பு மண்டலத்தில் தூண்டுதலை ஏற்படுத்தும். இந்த பொருட்களில் ஏதேனும், ஒன்றை எடுத்து நீங்கள் ருத்ராட்சம் மாலைகள் நேராக நீட்டி சோதித்து பார்த்தால், நிச்சயம் கடிகார முள் சுற்றும் திசைக்கு எதிர்புறமான திசையில் சுற்றும். இவை நெகட்டிவ் உணவு வகைகள் சார்ந்தவை ஆகும்.
பாசிட்டிவ் உணவு வகைகள்:
அதுவே நீங்கள் கேரட், பீட்ருட், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், பப்பாளி, எலுமிச்சை, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற பொருட்களை ருத்ராட்சம் வைத்து, சோதனை செய்து பார்த்தால், இந்த பொருட்கள் அனைத்தும் கடிகார முள் சுற்றும் திசைக்கு நேர் திசையில் சுற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இருப்பினும், நீங்கள் ருத்ராட்சம் வாங்கும் போது அது ஒரிஜினலா என்று பரிசோதித்து வாங்குவது அவசியம். உண்மையான ருத்ராட்சம் இமாலய மலைப் பகுதிகளில் இருக்கும் ஈல்லியோ என்ற மரத்தின் விதையாகும். குறிப்பாக, தென் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இந்த மரத்தின் விதை கிடைக்கிறது.