
Weight Loss Detox Drink Recipe: இன்றைய காலத்தில் நாம் உட்கொள்ளும் மேற்கத்திய உணவு வகைகள் உடலில், நச்சுக்கள் சேருவதற்கு காரணமாக உள்ளது. இதனால், உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை நம்மில் பலரும் எதிர்கொண்டு வருகிறோம். மேலும், வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இருதய பாதிப்பு போன்ற பல்வேறு நோய்கள் வருவதற்கும் இவை மூல காரணமாக உள்ளது.
இது போன்ற சூழ்நிலையில், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்குவது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதற்கு பல்வேறு உணவு முறைகள் பரிந்துரை செய்தாலும், இந்த குறிப்பிட்ட டீடாக்ஸ் பானங்கள் எடுத்துக் கொள்வது, உடலை நச்சுக்கள் இல்லாமல் வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பானங்களை எல்லாம் உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயாரித்து, வெறும் வயிற்றில் குடிப்பதால் நச்சுக்கள் உடம்பில் இருந்து உடனடியாக வெளியேறும். மேலும், உங்கள் உடல் எடை வேகமாக குறையும். அப்படியாக, மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கும் இந்த டீடாக்ஸ் பானங்களை எப்படி தயார் செய்வது ..? என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

புதினா மற்றும் வெள்ளரியின் டீடாக்ஸ்:
இதற்கு முதலில் ஒரு கப் புதினாவை நன்கு அலசி சுத்தம் செய்து, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு, அதனுடன் நறுக்கிய வெள்ளரிகாய் துண்டுகளை சேர்க்கவும். பிறகு இதனை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும், இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், உடலுக்கு ஏராளமான ஆரோக்கியத்தை அள்ளி தருகிறது.
லெமன் டீ :

முதலில், 1 லெமனை சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் சேர்ந்து வேகவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு, இதனுடன் தேன் 1 டீஸ்புன் சேர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடை சீக்கிரம் குறைவதுடன், உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களையும் விரைவில் வெளியேற்றும். மேலும், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேராமல் பாதுகாக்கும்.
இலவங்கப்பட்டை மற்றும் தேன் டீடாக்ஸ்:
இதற்கு முதலில், இலவங்கப்பட்டையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும், பிறகு வடிகட்டி ஆறியதும், அதனுடன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் பருகினால், உடலுக்கு மிகவும் நன்மை தரும். மேலும், இதில் இருக்கும் பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

துளசி டீடாக்ஸ்:
துளசி இழைகளை 1 கப் அளவு எடுத்து நன்றாக சுத்தம் செய்து, பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டிய பின் இந்த தேநீரை, காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன், குளிர்காலத்தில் வரும் இருமல், சளி போன்ற நோய்களுக்கு அருமருந்தாகவும் உள்ளது. எனவே, நீங்கள் நாள்தோறும் பருகும் டீ, காபிக்கு பதிலாக இந்த டீடாக்ஸ் பானங்கள் எடுத்துக் கொள்வது நிச்சயம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.