
Hair colouring at home: நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் தலைமுடியை பராமரிக்க, கருமையான அடர்த்தியான கூந்தலை, பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. திருமணத்திற்கு பெண்களை தேர்ந்தெடுக்கும் மணமகன் வீட்டார், அடர்த்தியான நீளமான கூந்தல் கொண்ட பெண்களை அதிகம் விரும்புவார்கள். ஆனால், இன்றைய நவீன காலத்தில் நீளமான கூந்தலை யாரும் பராமரிக்க விரும்புவதே கிடையாது. குறிப்பாக, வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், முடியை மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். அந்தவகையில், சமீப காலமாக மக்களிடைய மிகவும் பிரபலமான இருப்பது, கூந்தலுக்கு கலர் ட்ரீட்மெண்ட் ( ஹேர் கலரிங்) செய்வது. அப்படி, உங்கள் கூந்தலை அதிக விலை கொடுத்து, நீங்கள் ஹேர் கலரிங் செய்திருந்தால், அவற்றை எப்படி பராமரிப்பது என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம்.

அதிக கெமிக்கல் மற்றும் சல்ஃபேட் இல்லாத ஷாம்பூ பயன்பாடு:
நீங்கள் ஹேர் கலரிங் செய்திருந்தால், கெமிக்கல் மற்றும் சல்ஃபேட் உள்ள ஷாம்பூவை பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில், சல்பேட்டுகள் உங்கள் கூந்தலில் ஈரப்பதம், எண்ணெய் பசை ஆகியவற்றை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதனால், உங்கள் கூந்தலின் கலரிங் மங்கி போய்விடும். அத்துடன் தலைமுடி உதிரும் தன்மை கொண்டது. ஆகையால், அதற்கு தகுந்த ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்.

அடிக்கடி கூந்தலில் நுனியை வெட்டி விட வேண்டும்:
ஹேர் கலரிங் செய்யும் போது, கூந்தலில் வறட்சி ஏற்படும். இதனால், கூந்தல் எளிதில் உடையும் தன்மை கொண்டது. அத்துடன் அதிக விலை கொடுத்து நீங்கள் பண்ணிய கலரிங் விரைவில் போய்விடும். எனவே, நுனி பகுதியை அடிக்கடி வெட்டி விடவேண்டும்.
கூந்தலுக்கு சூடான தண்ணீர் கூடாது:
நீங்கள் ஹேர் கலரிங் செய்து இருக்கும் பொழுது சூடான தண்ணீரில் குளிக்கக் கூடாது. இது உங்கள் கூந்தலின் வேர் வரை பரவி சிறு சிறு துளைகள் வரை சென்று பாதிக்கும். இதனால் உங்களின் கூந்தலின் நிறம் எளிதில் மங்கும்.

ஹேர் ஸ்டைல் செய்யும் போது கவனம்:
ஹேர் கலரிங் செய்தவர்கள் முடியை சுருள் சுருளாக்க வேண்டும், அத்துடன் ஹேர் ஸ்டைல் செய்ய விரும்புவார்கள். அதற்கு ஏற்ற ஸ்ப்ரே, கிரீம் போன்ற பொருட்களை அப்ளை செய்து அதற்குப் பிறகு, விருப்பமான முறையில் வேண்டிய விதத்தில் ஸ்டைல் செய்து கொள்ள வேண்டும்.

இதனை தவிர்த்து, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது உங்கள் உடல் எடையை பராமரிப்பதற்கும், அடர்த்தியான கூந்தலுக்கும் உதவியாக இருக்கும்.