இன்றைய நவீன காலகட்டத்தில், நாம் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும், பணம் என்பது அவ்வளவு எளிதில் தங்கி விடுவது கிடையாது. மாத சம்பளம் வந்த மறுநொடி எதாவது ஒரு வழியில் செலவழிந்து விடுகிறது. எனவே, நம்முடைய எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதற்கு சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிலருக்கு பணத்தை எப்படி சேமிப்பது என்பது தெரியாது. அதற்கான எளிய 10 உதவிக் குறிப்புகளை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.
பட்ஜெட்டை உருவாக்கவும்:
பணம் சேமிக்க நினைப்பவர்கள் அனைவரும், மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்கி, உங்கள் வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிப்பது மிகவும் அவசியம். உங்கள் வருமானத்தில் அத்தியாவசிய செலவுகள், எதிர்கால சேமிப்புகள் மற்றும் தேவையான செலவுகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்குங்கள். இது உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் அளிக்கும். இதனை நிதி திட்டமிடல் என்று அழைக்கப்படுகிறது.
அவசர கால நிதி சேமிப்பு:
நம்முடைய வாழ்வில் இன்பம், துன்பம் வருவது கணிக்க முடியாத ஒன்றாகும். திடீரென வேலை இழப்பு அல்லது மருத்துவ செலவு இருக்கும். இதற்காக எப்போதும் முதல் மூன்று அல்லது ஆறு மாத வீட்டு செலவுகளுக்கு தேவையான நிதியை தனி கணக்கில் சேமித்து வைக்க வேண்டும்.
காப்பீடு அவசியம்:
உங்கள் வாழ்கையின் எதிர்கால தேவைக்கு நிச்சயம் காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. இதற்காக முதலில் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்கு இது உதுவும். இதனை தவிர்த்து டேர்ம் இன்ஷீரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும்:
ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு அது தேவையா ..? இல்லையா ..? என்பதை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து வாங்க வேண்டும். நம்முடைய பேராசைக்கு வாங்குவதைத் தவிர்க்கவும். நீங்கள் வாங்கும் பொருட்கள் உங்கள் பட்ஜெட்டுக்குள் ஒத்துபோகுதா…? என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.
கடனை புத்திசாலித்தனமாக நிர்வகிக்கவும்:
கடன் நிலுவையில் இருந்தால் அவற்றை திருப்தி செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள். மேலும், அவசர தேவைக்கு கடன் வாங்கினால் அதனை முறைப்படி செலவு செய்யுங்கள். அதுமட்டுமின்றி, குறைந்த வட்டியில் கடன் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்யுங்கள்:
மளிகைப் பொருட்கள், உடைகள் அல்லது பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்கும்போது தள்ளுபடிகள், விற்பனைகள் மற்றும் கூப்பன்களைப் பார்த்து வாங்குவது நல்லது. பணத்தைச் சேமிக்க மொத்தமாக வாங்குவது அல்லது நல்ல பிராண்டுகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது.
ஓய்வூதிய சேமிப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்:
ஓய்வூதியத்திற்காக முன்கூட்டியே சேமிக்கத் தொடங்குங்கள். முதலாளிகளால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எந்தவொரு வேலை செய்தாலும் அதற்கான ஓய்வூதிய திட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதிக வட்டிக் கடனைத் தவிர்க்கவும்:
கிரெடிட் கார்டுகள் பெரும்பாலும் அதிக வட்டி கடன்களை தருகிறது. ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டு கடனை முழுமையாகச் செலுத்துங்கள். உங்களால் முழுமையாகச் செலுத்த முடியாவிட்டால், வட்டி செலவைக் குறைக்க குறைந்தபட்ச கட்டணத்தை விட அதிகமாகச் செலுத்துங்கள்.
தொழில்துறை வல்லுனர்களின் ஆலோசனை பெறவும்:
உங்கள் நிதி சேமிப்பு முறைகளை பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால்,ஏதேனும் ஒரு நிதி ஆலோசகரைக் கலந்தாலோசிக்கவும். உங்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு, நிதித் திட்டத்தை உருவாக்க அவர் உங்களுக்கு உதவலாம்.
மேற்கூறிய இந்த 10 உதவி குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் சேமிப்பை அதிகரிக்கலாம். மேலும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கலாம்.