Garlic Side Effects: பூண்டு சாப்பிடுவது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. பூண்டில் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. இது தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஒரு நாளைக்கு 5 கிராம் அளவிற்கு பூண்டினை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், பூண்டு அதிகமாக சாப்பிடுவதால் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக தவிர்த்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டினை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் உடலுக்கு என்னென்ன தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
பூண்டு மூட்டு வலியைப் போக்க சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும், ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். யாரெல்லாம் பூண்டினை உட்கொள்ள கூடாது என்பதை பார்ப்போம்.
அசிடிட்டி பிரச்சனை:
அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் பூண்டினை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், இது உங்களுக்கு நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
துர்நாற்றம்:
வாய் துர்நாற்றம் மற்றும் வியர்வை துர்நாற்றம் இருந்தால் பூண்டினை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் பூண்டினை அதிகமாக உட்கொள்வது உங்களின் துர்நாற்றத்தை அதிகரிக்கும்.
பல் வலி:
பல்லில் அதிக வலி இருப்பவர்கள் பூண்டினை அதிகமாக எடுத்துக் கொண்டால், உங்களுக்கு வலிமை மேலும் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கர்ப்பிணிப் பெண்கள்:
கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் இந்த காலகட்டத்தில் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்தைத் தூண்டும். மேலும், பாலின் சுவையை மாற்றும் என்பதால் பாலூட்டும் தாய்மார்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
இதய பாதிப்பு:
பூண்டினை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால், நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது உங்களுக்கு இதய பாதிப்பை ஏற்படுத்தும்.
அதேபோன்று, நீங்கள் ஏதேனும் அறுவை சிகிக்சை மேற்கொண்டு இருந்தால், தொடர்ச்சியாக 1 மாதத்திற்கு பூண்டு சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.