Relationship Tips: திருமணத்திற்கு பிறகு பாலியல் உறவு என்பது ஆண் -பெண் ஆகிய இருவருக்கும் இன்பமான உச்சக்கட்ட இன்பத்தை அள்ளி தருகிறது. ஒருவேளை, இருவரில் ஒருவருக்கு அதில் ஈடுபாடு குறைவாக இருக்கும் பட்சத்தில், உங்கள் துணை சுய இன்பத்தில் ஈடுபடுவதன் மூலம் தங்களின் பாலியல் ஆசைகளை தீர்த்து கொள்கிறார்கள். ஆனால், கட்டுப்பாடுகள் இல்லாமல் தேவைக்கு அதிகமாக பாலியல் உறவில் ஈடுபட்டால் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஒருவேளை, பாலியல் விஷயத்தில் அதிக ஈடுபாடு இருப்பது பாலியல் அடிமைத்தனம் என்று நம்பப்படுகிறது. இதனை குறிக்கும் சில அறிகுறிகள் என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
ஆண் -பெண் ஆகிய இருவருக்குமே அளவிற்கு அதிகமாக இருக்கும் பாலியல் எண்ணங்கள், கற்பனைகள் மற்றும் நடத்தை போன்றவை பாலியல் அடிமைத்தனம் என்றழைக்கப்படுகிறது.
அடிக்கடி சுய இன்பம்:
உங்கள் துணை அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுவது. மேலும். ஆபாச இணைய தளங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பது பாலியல் அடிமைத்தனத்தின் மிக முக்கியமான அறிகுறிகள் என்று கருதப்படுகிறது.
ரகசியம் காத்தல்:
உங்கள் துணை அவர்களின் பாலியல் செயல்பாடுகளை உங்களிடம் இருந்து மறைத்தலோ அல்லது பொய் கூறினாலோ அவர்கள் பாலியல் அடிமைத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம் ஆகுமாம்.
பொறுப்பில்லாமல் இருப்பது:
பாலியல் அடிமைத்தனத்தில் இருப்பவர்களுக்கு, தங்களில் குழந்தைகள், குடும்பம் மற்றும் வேலை பற்றிய சிந்தனையை தவிர்த்து, சதா காலமும் பாலியல் செயல்பாடுகளை பற்றிய எண்ணம் அதிகரித்து காணப்படும்.
உறவுகளில் சிக்கல்:
பொதுவாக பெண்கள், தங்கள் திருமணத்திற்கு முன்பு தங்கள் கணவர் தங்களிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் இருக்கும். அந்த ஆசை நிறைவேறாமல் போகும் பட்சத்தில், அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் காரணமாக மன உளைச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் வேறொரு உறவை தேடி செல்ல நேரிடும்.
விபரீதமான பொசிஷன்கள்:
பாலியல் செயல்பாடுகளில் விபரீதமான பொசிஷன்களில் ட்ரை பண்ண சொல்லி உங்களை வற்புறுத்தினாலும், அவர்களுக்கு பாலியல் அடிமைத்தனத்தில் இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று நம்பப்படுகிறது. மேலும், தங்களின் பாலியல் ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமல் விபரீதமான முடிவுகளை எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை உணர்ந்து, ஒவ்வொருவரும் செயல்படுவது நல்லது.