Sharing is caring!

Fertility Tips: ஒரு பெண் தாய்மை அடைய ஏற்ற வயது 21 முதல் 35 வரை ஆகும். ஏனெனில், இந்த காலகட்டத்தில் தான் உடல் மற்றும் மன ரீதியாக, ஒரு பெண் முதிர்ச்சியடைகிறாள். 18 வயதிற்கு குறைவாகவோ அல்லது 35 வயதிற்கு மேற்பட்டோ, ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சமீப காலமாகவே கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. இதற்கு நம்முடைய வாழ்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே, ஒரு பெண் விரைவில் கர்ப்பம் தரிப்பதற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அவசியம். அவை என்னென்ன என்பதை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிங்கள்:

எண்ணெய் நிறைந்த மீன் வகைகள், சூரிய காந்தி விதைகள், வாதுமை கொட்டை, சியா விதைகள் போன்றவை கருவுறுதலுக்கு உதவும்.

மேலும் படிக்க,…Pregnancy Piles: கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான 5 முக்கிய காரணங்கள்..!

வைட்டமின் பி வகைகள்:

முழு தானியங்கள், பழுப்பு அரிசி, கீரை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றில் வைட்டமின் பி உள்ளது.

வைட்டமின் ஈ:

பாதாம், கோதுமை வித்து எண்ணெய், சூரிய காந்தி விதைகள், வெண்ணெய், பச்சை இலை காய்கறிகள் விந்து தரத்தை மேம்படுத்தி கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க செய்கிறது.

அயோடின்:

அயோடின் கலந்த உப்பு, கீரை, உருளைக்கிழங்கு, சோளம், வாழைப்பழம், பால், பீன்ஸ், மீன், இறால் போன்றவை கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க செய்கிறது.

சால்மன் மீன்:

சால்மன் மீனில் இருக்கும் அத்தியாவசிய கொழுப்பு, வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆண்களின் விந்து தரத்தை மேம்படுத்துவதுடன், பெண்களுக்கு கருவுறுதல் வாய்ப்பினை அதிகரிக்க செய்கிறது.

வைட்டமின் சி:

சிட்ரஸ் பழங்கள், திராட்சைப்பழம், கீரை வகைகள், ப்ரோக்கோலி, ஸ்ட்ராபெரி, கொய்யா, குடைமிளகாய் இவை விந்துகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மாதுளை:

மாதுளை விதைகளில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் விந்து தரத்தை மேம்படுத்தி கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க செய்கிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை எடுத்துக்கொள்வது, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) உள்ள பெண்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சரிப்படுத்த உதவுகிறது.

முட்டை:

முட்டையின் மஞ்சள் கருவில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி6, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை கருவுறுதல் வாய்ப்பினை அதிகரிக்க செய்கிறது.

துத்தநாகம்:

பச்சை இலை காய்கறிகள், பயிறு, பாதம், எள், பூசணி விதைகள் விந்து தரத்தை மேம்படுத்தி கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க செய்கிறது.

பிற தாதுக்கள்:

பீன்ஸ் மற்றும் பருப்பு, ஆப்பிள், சோயா, பீன், சுண்டல், தக்காளி, கொட்டைகள் போன்றவை ஆகும்.

தம்பதியினர் விரைவில் கருத்தரிக்க அவர்களின் திட்டம் குறித்து மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை பண்ண வேண்டும். மேலும், இணை நோய் இருப்பவர்கள் அதற்கு ஏற்ற முறையில் சிகிக்சை மேற்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைத்து எப்போதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் ஏதேனும் இருப்பின் அவற்றை கைவிட வேண்டும்.

மேலும் படிக்க,…Pregnancy Piles: கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான 5 முக்கிய காரணங்கள்..!

(Visited 18 times, 1 visits today)

Sharing is caring!