Pregnancy Exercise: கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது உங்களையும், உங்கள் குழந்தைகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும், பிரசவ காலத்தில் இந்த உடற்பயிற்சியானது, நீங்கள் அனுபவிக்கும் பிரசவ வலியில் இருந்து உங்கள் உடலை இலகுவாக வைத்திருக்க உதவுகிறது. வீட்டு வேலை செய்து வந்தால், சுக பிரசவம் நடைபெறும் என்று பெரியோர்கள் கூறுவதை கேட்டிருப்போம். ஆனால், இன்றைய நவீன காலத்தில் வீட்டு வேலை செய்யும் கர்ப்பிணி பெண்கள் குறைவு ஆகும். எனவே, தான் இன்றைய காலத்து பெண்கள் உடற்பயிற்சி பக்கம் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உடற்பயிற்சிகள் என்ன என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேலும் படிக்க…Fertility Tips: கருவுறுதலுக்கு உதவும் உணவு பட்டியல்: உங்கள் லிஸ்டில் இருக்கா..?
நடைபயிற்சி:
ஒவ்வொரு நாளும் சுமார் 30 முதல் 40 நிமிடம் விறுவிறுப்பான நடைபயிற்சி நன்மை பயக்கும். இது உடலை புதுப்பித்து உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
நீச்சல்:
இது ஒரு நல்ல உடற்பயிற்சியாகும். இது காயம் மற்றும் சிரமத்தை ஏற்படுத்தாமல் ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை பயக்கும்.
யோகா:
ஆழமான சுவாசம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் நஞ்சுக்கொடிக்கும் ஆக்ஸிஜன் வரவை மேம்படுத்துகிறது. யோகா நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் உடல் முழுவதும் ஆற்றல் ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
கர்ப்பிணிகளுக்கு உரிய இடுப்பு பயிற்சிகள்:
இடுப்பு பயிற்சிகள் கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலை ஆதரித்து தாங்கி பிடித்து இடுப்பு தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
செய்யும் முறை:
இதற்கு நீங்கள் இடுப்பு தசையை சுருக்கி 15 விநாடிகள் வைத்திருங்கள். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். இதனை 10 முறை நிச்சம் செய்யவும். இந்த பயிற்சியை சுமார் 10 முதல் 15 வினாடிகள் வரை செய்யலாம். பிரசவத்திற்கு பின்னும் கூட முதல் சில வாரங்கள் இந்த பயிற்சியினை வலுவூட்டும் இடுப்பு பயிற்சியை செய்யலாம்.
வலுவூட்டும் கால் பயிற்சிகள்:
கால் பயிற்சிகளை உட்கார்ந்தோ அல்லது நின்று கொண்டு செய்யலாம். அவை உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கணுக்கால் வீக்கத்தைக் குறைகின்றன. முட்டிக்கு கீழ் பின் தசைகளில் ஏற்படும் பிடிப்பை தடுக்கிறது.
இதற்கு முதலில் உங்கள் கால்களை முன்னால் நீட்டி, உங்கள் கால் விரல்கள் மேலே நோக்கி இருக்குமாறு உட்காரவும். இப்போது உங்கள் பாதத்தை பலமுறை மேலே, கீழே நகர்த்தவும். உங்கள் முட்டிக்கு கீழ் பின் தசைகளில் ஏற்படும் பிடிப்பை உணர வைக்கும். உங்கள் பாதத்தை எட்டு முறை ஒரு வழியிலும், எட்டு முறை மற்ற வழியிலும் சுழற்றி இன்னொரு பாதத்துடன் மீண்டும் செய்யவும்.
சுவாச பயிற்சிகள்:
கர்ப்பிணி பெண்கள் சுவாச பயிற்சி செய்வது பிரசவ காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு விதமான மன அமைதி உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க…Fertility Tips: கருவுறுதலுக்கு உதவும் உணவு பட்டியல்: உங்கள் லிஸ்டில் இருக்கா..?