”கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்” என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இன்றைய காலத்தில் திருமண உறவில் அன்பு, பொறுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்றவை குறைவாகவே காணப்படுகிறது. இதனால், உங்கள் துணை வேறொருவரின் அன்பை எளிதில் தேடி செல்கிறார்கள். இதுவே கள்ள உறவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெரும்பாலும், கள்ள உறவில் ஈடுபடுவது ஆண்களே என்ற தவறான கருத்து உலா வருகிறது. உண்மையில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள். எனவே, பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான மிக முக்கியமான காரணங்கள் என்று சில சொல்லப்படுகிறது. அவை என்னென்னெ என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்த்து தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.
சுய மரியாதை அவசியம்:
இதற்கு முதன்மை காரணமாக, கணவரிடம் இருந்து கிடைக்கும் அன்பு, பாசம், அரவணைப்பு போன்றவை இல்லாமை பெண்களை கள்ள உறவில் ஈடுபடுவதற்கு அழைத்துச் செல்கிறது. இதனால், அவர்கள் வேறொருவரின் அன்பால் எளிதில் ஈர்க்கப்பட்டு காதல் வலையில் எளிதில் விழுகிறார்கள்.
பாலியல் ஆசை இல்லாமை:
பாலியல் ஆசை இல்லாமல் இருக்கும் கணவரால், பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அதுமட்டுமின்று, உறவில் திருப்தி இல்லாமல் இருப்பது இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் அவர்கள் வேறொரு நபரின் அன்பால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். அந்த ஆணிடம், உறவில் முழு திருப்தி அடையும் போது உறவில் உச்சம் பெற்று கள்ள உறவை தொடர்கிறார்கள்.
உறவுகளில் சிக்கல்:
பொதுவாக பெண்கள், தங்கள் திருமணத்திற்கு முன்பு தங்கள் கணவர் தங்களிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் இருக்கும். அந்த ஆசை நிறைவேறாமல் போகும் பட்சத்தில், அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் காரணமாக மன உளைச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் வேறொரு ஆண் நபரிடம் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள்.
நெருக்கம் அவசியம்:
பெண்களுக்கு பொதுவாக உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ நெருக்கம் தேவைப்படுகிறது. ஒரு பெண் தனது உறவில் அந்தரங்கமான திருப்தியை உணரவில்லை என்றால், வேறொரு ஆண் நபருடன் ஈர்ப்பு உருவாகும். அதேபோன்று, சில நேரம் கணவர் தன்னை துன்புறுத்தும் நேரம், வேறொரு ஆண் நண்பரின் வலையில் எளிதில் விழுகிறார்கள்.