Sharing is caring!

Health tips in Tamil: இன்றைய காலகட்டத்தில், நீரழிவு நோய் என்பது வயது வித்தியாசமின்றி, நம் அனைவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நோயாக மாறியுள்ளது. இதற்கு நம்முடைய உணவு பழக்கவழக்கமும், வாழ்க்கை முறை மாற்றமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே, உணவு விஷயத்தில் ஒருவர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், நீரழிவு நோய் ஒருவருக்கு உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், இதய நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கோடை காலங்களில், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பானங்களில் ஒன்றாக இளநீர் உள்ளது. வெயில் காலங்களில் ஏழை எளிய மக்களின் தாகம் தீர்க்கும் நீர் ஆகாரமாகவும் இளநீர் உள்ளது. இளநீர் குடிப்பதால் உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதுடன், உடலுக்கு தேவையான ஆற்றலையும் கிடைக்க செய்கிறது. இருப்பினும், நீரழிவு நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா..? என்ற கேள்வி இயல்பாகவே நம்மில் பலருக்கும் இருக்கிறது.

இதற்கான விளக்கத்தை மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், பொதுவான இளநீர் என்பது அனைத்து தரப்பு மக்களும் அருந்தும், மிகவும் குளிர்ச்சியான பானமாகும். சிறுநீரக கற்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கு இளநீர் அருமருந்தாக பயன்படுகிறது. இதனால், அவர்களின் சிறுநீர் ஆரோக்கியம் மேம்படும். இதில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், வைட்டமின்கள், கால்சியம், மெக்னீசியம் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், இதய நோய் தொடர்பான பாதிப்புகள் வராமல் பாதுகாக்கிறது.

ஆனால், நீரழிவு நோயாளிகளை பொறுத்தவரை, முத்திய இளநீரில் இருக்கும் தேங்காய் தண்ணீர் குடிக்க கூடாது. ஏனெனில், இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே, நீரழிவு நோயாளிகள், வழுக்கை இல்லாத இளம் தென்னங்காய்களில் உள்ள இளநீரை குடிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இளநீரைக் குடிக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோன்று, கர்ப்ப காலத்தில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இளநீரை பருக வேண்டும்.

(Visited 30 times, 1 visits today)

Sharing is caring!