Bigg Boss Double Eviction: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிக்பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம்.
பிரதீப் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் அவரால் எங்களுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயா, பூர்ணிமா கேங் புகார் கொடுத்து அவரை வெளியேற்றிவிட்டனர். இதனால், பிரதீபுக்கு ஆதரவாக ரசிகர்கள் மட்டும் இன்றி, முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள், பிரபலங்கள் என பலர் தங்களின் கருத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
ஐஷு நிக்சனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ:
அதுமட்டும் இல்லாமல், நிக்சன், ஐஷூ இருவரும் ஆரம்பத்தில் முதல் இரு வாரங்கள் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் ஆனால் நாட்கள் போகப் போக இருவரும் காதல் வலையில் சிக்கினர்.
சமீபகாலமாக நிக்சன் உடன் சேர்ந்து ரொமான்சில் ஈடுபட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு ஐஷு நிக்சனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஐஷூ நிக்சன் உடன் நெருங்கி பழக ஆரம்பித்ததில் இருந்து அவரைப்பற்றி பதிவிடுவதை அவரது பெற்றோர் நிறுத்திவிட்டனர். இதனால் ஐஷூ மீது அவர்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
ஐஷு அம்மா உருக்கம்:
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஐஷு குறித்து அவருடைய அம்மா ஒரு உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஐஷு, எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு. இந்த ஐஷு வேண்டாம். நாங்கள் எங்களுடைய ஐஷுவை பார்க்க விரும்புகிறோம். எது உண்மை, எது பொய் என்று விரைவில் நீ உணர்வாய் என நம்புகிறேன் என்று உருக்கமாக அவரது அம்மா பதிவிட்டுள்ளார்.
வினுஷா தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிலடி:
நிக்சன் போட்டியாளர்கள் குறித்து பேசிய விஷயங்களை பிக்பாஸ் எல்லா போட்டியாளர்களுக்கும் போட்டு காட்டி வருகிறார். பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், நிக்சன் தன்னை ஆபாசமாக பேசி, உருவ கேலி செய்ததற்கு வினுஷா தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிலடியும் கொடுத்துள்ளார். எனவே, பிரதீப்பை விட நிக்சன் மோசமாக பேசுவதால், அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்:
இந்த வாரம் பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்டில், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, ஆர்ஜே பிராவோ, ஐஷு மற்றும் பூர்ணிமா ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர்களில், முதல் மூன்று இடங்களை அர்ச்சனா, தினேஷ், விசித்ரா ஆகியோர் பெற்றுள்ளனர். கடைசி இரண்டு இடங்களை ஐஷு மற்றும் பூர்ணிமா பெற்றுள்ளனர். இவர்களில், பூர்ணிமா ரவிதான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். இருப்பினும், ஐஷுவை எதிர்பார்த்து அவர்கள் பெற்றோர்கள் இருப்பதால், இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.