Bigg Boss Controversy: பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ள இளம் போட்டியாளர்களான நிக்சன் மற்றும் ஐஷு தங்களது மைக்குளை கழட்டி வைத்து காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது .
பிக்பாஸ் சீசன் 7ல் பல்வேறு சர்ச்சைகள்:
மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 7 சீசனில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மற்ற சீசன்களை போல் இல்லாமல் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சில போட்டியாளர்கள் தற்போது காதல் ஜோடிகளாக மாறி இருக்கின்றனர்.
வினுசா மற்றும் கேந்திரன் எலிமினேஷன்:
இதுவரை மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்று போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த வாரம் நாமினேஷம் லிஸ்டில், நிக்சன், மணி, மாயா, வினுசா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ஜோவிகா, பிரதீப், விஷ்ணு, யுகேந்திரன் மற்றும் அக்ஷயா ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர்களில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் என்ற அடிப்பையில், தற்போது வினுசா மற்றும் கேந்திரன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் தான் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்:
இதனால் இந்த வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரியாக 5 பேர் வர இருப்பதாக கமல் தெரிவித்திருந்தார். இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில், தற்போது, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மியின் கணவர் தினேஷ், ராஜா ராணி 2 சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த விஜே அர்ச்சனா, பிரபல பாடகர் கானா பாலா, மற்றும் RJ பிராவோ ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதலுக்கு பஞ்சமே இருக்காது, அந்த சர்ச்சையில் தற்போது நிக்சன் மற்றும் ஐஷு இணைந்துள்ளன.
பிக்பாஸ் வீட்டில் முத்தக் காட்சி வீடியோ:
மைக்குளை கழட்டி வைத்து நிக்சன் மற்றும் ஐஷு பேசிக் கொண்டிருக்கும் போது, கண்ணாடிக்கு அந்தப்பக்கம் இருந்தபடியே ஐஷு, நிச்சனுக்கு முத்தம் கொடுக்க, உடனே குதூகலமான நிக்சனும் பதிலுக்கு முத்தம் கொடுக்கிறார். நடுவில் ஒரு கண்ணாடி இருந்ததால், லிப் லாக் சீன் மிஸ்சிங் என்று நெட்டிசன்ஸ் இணையத்தில் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். இன்னும், சிலர் இது என்ன மருத்துவ முத்தமா..? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குழந்தைகள், பெண்கள் பார்க்கும் இதுபோன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் முத்தக்காட்சி இடம்பெற்றது தற்போது, சர்சையாக மாறியுள்ளது.