Thangalaan Teaser: பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
நட்சித்திர பட்டாளங்கள்:
ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கோலார் தங்க வயலில் தமிழர்கள் பட்ட கஷ்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இதில், விக்ரமின் கெட்டப் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் காட்டாத லுக்கில், விக்ரம் முதல் முறையாக தங்கலான் படத்தில் தோன்றியுள்ளார்.
தங்கலான் படத்தின் டீசர்:
இந்த நிலையில், பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தங்கலான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அட்டகாசமான சண்டை காட்சிகளும், ரத்த தெறிக்கும் போர்க்களமும் என படத்தின் ஒவ்வொரு காட்சியும் வேற லெவலில் இருக்கிறது. இந்த திரைப்படம், படம் வரும் 2024 ஆம் ஆண்டு 26ம் தேதி குடியரசு நாளில் வெளியாகிறது.
தங்கலான் குறித்து சுவாரஸ்ய தகவல் சொன்ன விக்ரம்:
இது குறித்து பேசிய விக்ரம், தான் நடித்த படங்களிலே தங்கலான் மிகவும் கடினமான திரைப்படம் என்று விக்ரம் கூறியுள்ளார். இதுவரை நான் கஷ்டப்பட்டு நடித்த பிதாமகன், இராவணன், ஐ போன்ற படங்களை காட்டிலும் தங்கலான் மிகவும் கடினமானது. இதில் இடம்பெற்ற காட்சி அமைப்புகள் அனைத்தும் மிகவும் கடினமானது.
K.G.F திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், தங்கலான்:
K.G.F திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இங்கு அதிகப்படியான குளிரும், மதியம் அதிகப்படியான வெயிலும் இருக்கும். ஆனால், நாள் முழுவதும் நாங்கள் அனைவரும் கோவணத்தோடு நிற்க வேண்டும். படத்தை இயக்குநர் தத்துரூபமாக எடுக்க நினைத்ததால் அனைத்தையும் தாங்கி கொண்டோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.