
Rambha’s Re-Entry: 90களில் வாலிபர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த ரம்பா, தமிழில் மீண்டும் நடிக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அணுகியதால், சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க கதை கேட்டு வருகிறாராம்.

ரம்பாவின் சினிமா வாழ்கை கதை:
90ஸ் கிட்ஸ் பேவரைட் நாயகி ரம்பா, 1993 ஆம் ஆண்டு உழவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானமானவர். உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் (அழகிய லைலா) கார்த்தியுடன் சேர்ந்து நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். சுந்தர புருஷன் லிவிங்ஸ்டன் உடன் சேர்ந்து நடித்தார். காதலர் தினம் (ஹோ மரியா ) பாடல் பிரபலமானது. மின்சார கண்ணா (ஊதா பூ ) திரைப்படத்தில் விஜய் கூட சேர்ந்து நடித்தார். நினைத்தேன் வந்தாய் திரைப்படம் (இடுப்பில் மச்சம்) இவரின் ஹிட் லிஸ்டில் உள்ளது.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்:
விஜய் ,அஜித், ரஜினி ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தனக்கென்று மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டவர்.
இந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்த ரம்பா:

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
திருமண வாழ்கை:
15 வருடங்கள் இந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்த ரம்பா, 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, கனடாவில் குடும்பம், குழந்தை என்று குடும்பத்தோடு வசிக்கிறார். அவர்களுக்கு தற்போது இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.

சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் தொடையழகி ரம்பா!
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார். தமிழில் மீண்டும் நடிக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அணுகியதால், சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க கதை கேட்டு வருகிறாராம் ரம்பா. இதுபற்றி ரம்பா கூறுகையில், சினிமாவின் ட்ரெண்ட்தான் மாறியுள்ளதே தவிர சினிமா என்றுமே மாறாது எனவும், கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளதால், ரசிகர்கள் விரைவில் என்னை திரையில் பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.