Sharing is caring!

Aishwarya Arjun Engagement: ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி ராமையாவின் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்துள்ளது.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் 90ஸ் கிட்ஸ் பேவரைட் நாயகன் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். இவர் சிறந்த நடிகர் என்பதை தாண்டி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். சமீபத்தில், லியோ படத்தில் இவர் ஏற்று நடித்த ‘ஹரோல்டு தாஸ் கேரக்டர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் படிக்க…Thalapathy 68: தளபதி 68 படத்தில் இணைந்த 20 பிரபலங்கள்…அதன் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!

அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா:

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு தான் தற்போது கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஐஸ்வர்யா பட்டது யானை திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார். இவரும் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

மேலும் படிக்க…Thalapathy 68: தளபதி 68 படத்தில் இணைந்த 20 பிரபலங்கள்…அதன் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!

ஐஸ்வர்யா, உமாபதி நிச்சயதார்த்தம்:

அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவல் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் உமாபதி. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினார்கள். இதையடுத்து, இவர்களது திருமண நிச்சயதார்த்தம், அர்ஜுன் புதிதாக கட்டியுள்ள சென்னையில் உள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் எளிமையாக நடைபெற்றுள்ளது.

இருவீட்டு குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளனர். தற்போது, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

பிரமாண்டமான முறையில் திருமணம்:

இதையடுத்து, இருவரின், திருமணம் மிகவும் விரைவில் பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. இதில், தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகை சேர்ந்த ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்பட்டது.

மேலும் படிக்க…Thalapathy 68: தளபதி 68 படத்தில் இணைந்த 20 பிரபலங்கள்…அதன் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!

(Visited 52 times, 1 visits today)

Sharing is caring!