Banana face pack: அழகை விரும்பாதவர்கள், ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும், குறிப்பாக, பெண்கள் தங்கள் முக அழகை, மேனியை பராமரிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். இதற்காக இன்றைய ஆன்லைன் விற்பனையில் இருக்கும் விதவிதமான கிரீம் எல்லாம் வாங்கி பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் காசு அதிகம் செலவு செய்து, பியூட்டி பார்லர் சென்று முக அழகை மேம்படுத்துவர். இப்படி, என்னதான் விதவிதமான பொருட்கள் கடைகளின் வாங்கி நாம் பயன்படுத்தி பார்த்தாலும், நாட்கள் செல்ல செல்ல உங்களின் முகம் சுருங்கி வயதான தோற்றம் அளிக்கும். இன்னும் சிலருக்கு தோல் தொடர்பான வியாதிகள் வந்து சேரும். எனவே, இது போன்ற பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டியது அவசியம்.
அதற்காக நாம் இயற்கை வழிமுறைகளை தேடி செல்வது அவசியம். அதிலும், குறிப்பாக வெயில் காலத்தில் நம்முடைய முகம் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும். அதேபோன்று, மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் சருமத்தில் நமைச்சலை ஏற்படுத்தும். எனவே, எல்லா காலங்களிலும் உங்களுடைய முகம் அழகை பராமரிக்க தேவையான உதவி குறிப்புகள் இந்த பதிவில் இருக்கிறது.
இதற்கு உங்களுக்கு தேவையான பொருட்கள் முதலில், வாழைப்பழம் வீட்டில் இல்லையென்றால், கடைக்கு சென்று வாங்கி வைத்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் ஓட்ஸ் மற்றும் தேன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நமக்கு தேவையான பேஸ் பேக் தயார்.
இதனை முகத்தில் போட்டு கொள்ள முதலில், முகத்தை கழுவி சுத்தமான காட்டன் துணியை வைத்து நன்கு துடைத்து கொள்ளுங்கள். பிறகு, இந்த பேஸ் பேக்கை எடுத்து முகம், கழுத்து, கை, கால்கள் போன்ற எல்லா பகுதிகளிலும் போட்டு கொள்ளுங்கள்.
பிறகு, உங்கள் முகத்தை 15 முதல் 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். பிறகு கழுத்து, கை, கால் பகுதியில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது கண்ணாடியில் பார்த்தால் உங்களுக்கு பளபளப்பான அழகான சருமம் கிடைக்கும். இந்த டிப்ஸ் பயன்படுத்தி, நீங்கள் குறைந்த செலவில் வெறும் 24 மணி நேரத்தில் உங்கள் முகத்தை தேவதை போல் ஜொலிக்க செய்யலாம்.