Mosquito bites: மழைக்காலம் துவங்கிவிட்டாலே கொசு தொல்லை வந்து நம்மை பாடாய்ப்படுத்தும். அதிலும் வீட்டில் ஓரங்களில், கால்வாய்கள், தண்ணீர் தேக்கம் அதிகம் இருக்கும் பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து காணப்படும். பகல் முழுவதும் நாம் ஓடி ஓடி உழைத்துவிட்டு, இரவில் வீட்டில் நிம்மதியாக உறக்க வரும் போது கொசு கடியால் நம்முடைய தூக்கம் கெட்டு போகும். இதனால், மறுநாள் வேலையும், முடிக்கமுடியாமல் தடைபடும். நாட்கள் செல்ல செல்ல ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படும்.
கொசுவை விரட்டியடிக்க இதற்காக நாம் கடைகளுக்கு சென்று, என்னதான் கெமிக்கல் கலந்த விதவிதமான பொருட்களை வாங்கி வைத்தாலும், கொசு நமக்கு டிமிக்கி கொடுத்து விட்டு எளிதில் ஓட்டம் பிடிக்கும். அதுவும், சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இன்னும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். ஏனெனில், நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த மருந்துகள், குழந்தைகளில் உடல் ஆரோக்கியத்தில் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இயற்கையான முறையில் மூலை, முடுக்குகளில் ஒழிந்து இருக்கும் கொசுவை ஓட ஓட விரட்டியடிக்க தேவையான உதவி குறிப்புகளை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
இதற்காக நீங்கள் கடைக்கு சென்று முதலில், வேப்ப எண்ணெய் வாங்கி வைத்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் வீட்டிலேயும் தயாரித்து வைத்து கொள்ளலாம். பிறகு, அதனுடன் கற்பூரம் மற்றும் பூண்டு போன்றவை சேர்த்துக் கொள்ளலாம்.
முதலில் அடுப்பில் கடாய் வைத்து வேப்ப எண்ணெய் 2 டீஸ்புன் ஊற்றி அதனுடன் நான்கு முதல் ஐந்து பூண்டு பல் உரித்தது மற்றும் நுணுக்கிய 2 கற்பூரம் போன்றவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் வாசம் வீடு முழுவதும் பரவினால், தான் கொசுக்கள் அடியோடு ஒழியும். தேவைப்பட்டால், அதனுடன் வெங்காயம் சேர்த்து கொள்ளலாம்.
ஒரு முழு வெங்காயம் எடுத்து அந்த எண்ணெயில் முக்கி கொசு தொல்லை எந்த இடத்தில் அதிகமாக இருக்கிறதோ..? அந்த இடத்தில் துணியில் வைத்து கட்டி வைக்க வேண்டும். குறிப்பாக, வீட்டின் நுழைவாயில் பகுதியில், அதாவது வரவேற்பு அறையில் கட்டி வைக்க வேண்டும். தேவைப்பட்டால் கதவு, ஜன்னல், பாத்ரூம், கிச்சன் போன்ற இடங்களிலும் கட்டி வைத்து கொள்ளலாம். இதனால், உங்கள் செலவும் மிச்சம், கொசு தொல்லையும் முழுவதும் இருக்காது. மேலும், உங்கள் ஆரோக்கியத்திலும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. தேவைப்பட்டால், முயற்சி செய்து பாருங்கள் நிச்சம் பலன் கிடைக்கும்.