Sharing is caring!

நம்முடைய எல்லோரின் வீட்டிலும், தோசை கல் பயன்பாடு நிச்சயம் இருக்கும். இருப்பினும், இன்றைய காலத்தில், இரும்பு தோசை கல் பயன்பாட்டிற்கு பதிலாக, ஈஸியாக தோசை வார்க்கும், நான்ஸ்டிக் தவா பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நீண்ட நாள் உபயோகிக்காமல் இரும்பு தோசை கல், கிடப்பில் போடப்பட்டிருக்கும். சிலரது வீட்டில் சப்பாத்தி கூட சுட முடியாமல் ஓரங்களில் கரி பிடித்து இருக்கும். எனவே, இது போன்ற நீண்ட நாள் பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தோசை கல்லினை எளிதில் எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து  கொள்ளப் போகிறோம்.


Credit: kitchenseer.com/

டிப்ஸ் 1:

இதற்கு முதலில், தோசை கல்லினை அடுப்பின் மீது வைத்து பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். தோசை கல் நன்றாக சூடானதும், அடுப்பினை சிம்மில் வைத்து கல் உப்பினை தூவி, மேலே நல்லெண்ணெய் இரண்டு டீஸ்புன் சேர்த்து, எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும். பிறகு, பாத்திரம் தேய்க்கும் இரும்பு ஸ்பான்ஸ் வைத்து தேய்த்து எடுத்தால் போதும்,  தோசை கல்லில் இருக்கும் அழுக்கு எல்லாம் சுத்தமாக வந்து விடும்.

டிப்ஸ் 2:

 தோசை கல்லின் ஓரங்களில் கரி பிடித்து இருந்தால், முதலில் அடுப்பினை பற்ற வைத்து தோசை கல்லினை வைக்க வேண்டும். பிறகு, மண் அகல் விளக்கின் அடிபாகத்தை தோசைக்கல்லினை மேல் வைத்து, நன்றாக தேய்த்து எடுங்கள். இப்படி செய்வதால், தோசை கல்லின் ஓரங்களில் ஒட்டி இருக்கும் எண்ணெய் பிசுக்கு, கரி எல்லாம் சுத்தமாக நீங்கும். பிறகு குளிர்ந்த தண்ணீர் வைத்து சுத்தம் செய்தால், நன்றாக கழுவி விடுங்கள்.

Credit: kitchenseer.com/

டிப்ஸ் 3:

இதையடுத்து, மீண்டும் தோசை கல்லினை அடுப்பின் மீது வைத்து வெங்காயம் வைத்து தேய்த்து, பிறகு நெல்லிக்காய் அளவு புளியைப் போட்டு நன்றாக தோசை கல்லை தேய்த்து எடுங்கள். இப்போது தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவி விட்டால் போதும், தோசை கல் சுத்தமாகி விடும்.

முதலில் இதில் முட்டை ஊற்றி ஆம்லெட் போட்டு பாருங்கள். அதன் பின்பு, இதில் தோசை சுட்டு பாருங்கள், மொறு மொறு தோசை ரெடியாகும். உங்களுக்கு இந்த குறிப்பு உதவியாக இருந்தால், நிச்சயம் பயன்படுத்தி பாருங்கள்.

(Visited 29 times, 1 visits today)

Sharing is caring!