Sharing is caring!

தூக்கம் என்பது ஒரு வரமாகும். எல்லோருக்கும் அது எளிதில் கிடைத்து விடுவது கிடையாது. சிலர் படுத்தவுடன் தூங்கி விடுவார்கள். ஆனால், இன்னும் சிலருக்கு பகல் முழுவதும் என்னதான் கடினமாக உழைத்தாலும், இரவில் தூக்கம் என்பதே இருக்காது. ஒருவருக்கு தூக்கம் சரியாக வரவில்லை என்றால், மன அழுத்தம் மட்டுமின்றி, உடலில் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் வந்து சேரும். இதற்கு வாஸ்து, சாஸ்திரம் குறைபாடும் ஒரு வித காரணமாக இருக்கலாம். இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும், உணவிற்கு பிறகு நிம்மதியான தூக்கம் பெறுவது அவசியமான ஒன்றாகும். எனவே, ஒருவர் நிம்மதியான தூக்கம் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இரவில் தூக்கம் வருவதற்கு முதலில் கடவுளை மனதார நினைத்து வழிபட வேண்டும். பிறகு, ஒரு மஞ்சள் துணியில் உப்பினை கட்டி தலையணையின் கீழே வைக்க வேண்டும். வேறு எதை பற்றியும் நீங்கள் நினைக்கக் கூடாது.

மேலும் படிக்க…Rudraksha For Women: மாதவிடாய் காலத்தில் பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா..? சத்குரு கூறும் விளக்கம்…!

அதேபோன்று, இரவில் உறங்கும் போது உங்கள் தலையணைக்கு அடியில், வேப்ப இலைகளை வைத்துக் கொண்டு தூங்குங்கள். இவை உங்கள் மனதில் இருக்கும், கெட்ட எண்ணங்களை நீக்கிவிடும். மேலே சொன்ன வழிமுறைகளை நீங்கள் பின்பற்றி பார்த்தால் போதும், கெட்ட சக்திகள் வீட்டில் இருந்து விலகி ஓடும். நாள் முழுவதும் நிம்மதியான தூக்கம் பெறலாம்.

கெட்ட கனவுகள் அதிகமாக வந்தால், கல்லுப்பு, மஞ்சள் ஆகிய இரண்டையும் தண்ணீரில் கரைத்துக் கொண்டு, வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்து விடுங்கள். இதனால், உங்களின் எதிர்மறையான எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் மனதில் தோன்றும்.

அதேபோன்று, நிம்மதியான தூக்கம் பெறுவதற்கு, கூடுமான வரை வடக்கு நோக்கி தலை வைக்கக் கூடாது. வடக்கு திசை மற்ற எல்லா சுப காரியங்களுக்கும், நல்ல திசையாக இருந்தாலும், தூங்குவதற்கு ஏற்ற திசை கிடையாது. அதற்கு பதிலாக நீங்கள் கிழக்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க….Sani Peyarchi 2023: சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்..! உங்கள் ராசி என்ன..?

(Visited 17 times, 1 visits today)

Sharing is caring!