Relationship Tips: பாலியல் உறவு என்பது ஆண், பெண் ஆகிய இருவருக்கும் இன்பமான அனுபவமாக இருக்க வேண்டும். எவரேனும் ஒருவர் அதனை பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அது இருவருக்கும் உறவில் சிக்கலை ஏற்படுத்தும். பாலியல் உறவிற்கு பிறகு பெண்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்ன என்பதை பற்றித் தான் நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கப்போகிறோம்.
சிறுநீர்ப்பையை சுத்தம் செய்தல்:
உடலுறவின் போது பாக்டீரியா சில நேரம் உங்கள் யோனிக்குள் நுழைந்து விடும். இது தேவையற்ற சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றை ஏற்படுத்தும். எனவே, அதனை வெளியேற்ற சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியம். பொதுவாக, கருத்தரிக்க முயற்சி செய்வோர் உடலுறவு மேற்கொண்டு 1 மணி நேரத்திற்கு பிறகு சிறுநீர்ப்பையை காலி செய்வது அவசியம்.
கருத்தடை சாதனங்கள்:
கர்ப்பம் தரிக்க முயற்சி செய்வோர்கள் ஆணுறை அல்லது பெண்ணுறை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில், இது உங்களுக்கு தேவையற்ற கர்ப்பம் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவதை தவிர்க்கும்.
வலியை தவிர்த்தல்:
உடலுறவின் போது முனங்கல் இருப்பது ஆண் – பெண் ஆகிய இருவருக்கும் உணர்ச்சியை தூண்டும். உறவில் இன்பமான அனுபவத்தை வழங்கும். சில நேரம், உடலுறவின் போது முனங்கல் இருப்பது வலி பற்றியதாகவும் இருக்கலாம். உறவில் ஆழமான புணர்ச்சி பாலியல் மூலம் பரவும் பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்யும். எனவே, வலி அதிகமாக இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம்.
யோனியில் ரத்தப்போக்கு:
உடலுறவிற்கு பிறகு யோனியில் ரத்த கசிவு ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அழைத்து ஆலோசனை பெறுவது அவசியம். இது பொதுவாக உங்களுக்கு யோனியில் வறட்சி காரணமாக ஏற்படும்.
இறுக்கமான உள்ளாடைகள்:
உடலுறவிற்கு பிறகு இறுக்கமான உள்ளாடைகள் அணிய வேண்டாம். இது உங்கள் அந்தரங்க பகுதியில் தோல் அரிப்பு , எரிச்சல் மற்றும் ஈஸ்ட் போன்ற பல்வேறு நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும்.
உங்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்தல்:
உடலுறவிற்கு பிறகு உங்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்தல் அவசியம். இதற்கான நீங்கள் கெமிக்கல் கலந்த சோப்பு, கீரிம் போன்றவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது உங்களுக்கு தொற்று நோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, உடலுறவிற்கு முன்னும், பின்னும் எப்போதும் பருத்தி துணி மற்றும் தண்ணீரை பயன்படுத்தி துடைக்க வேண்டும்.
சுடு தண்ணீரில் குளிக்க வேண்டாம்:
உடலுறவிற்கு பிறகு குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். ஏனெனில், சூடான தண்ணீரில் குளிப்பது பாக்டீரியா நோய் தொற்றினை அதிகரிக்க உதவும்.