Sharing is caring!

Weight Loss: உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை நம்மில் பலரும் எதிர்கொண்டு வருகிறோம். உடல் எடையை குறைக்க பலரும் ஜிம்மில் பல மணிநேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை நம்மில் பலர் எதிர்கொண்டு வருகிறோம். உடல் எடையை குறைக்க ஜிம் சென்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், சிலருக்கு உடல் எடையானது குறையவே குறையாது. இதனால் அடுத்தக்கட்டமாக உணவு கட்டுப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை குறைக்க வேண்டும் என்ற முறையில் சிலர் காலை உணவு உண்பதை தவிர்க்கிறார்கள்.

மேலும் படிக்க….Sweet Potato Benefits: நீரழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஏன் உகந்தது..! மிஸ் பண்ணிடாதீங்க!

இன்னும், சிலர் இரவு உணவை தவிர்க்கிறார்கள். சிலரோ நாள் முழுவதும் உணவு உண்ணாமல் விட்டுவிடுகிறார்கள். மொத்தத்தில் குறைவான உணவு உண்பதால் உடல் எடை குறையும் என்று பலரும் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் முற்றிலும் தவறானது இதற்கு பதிலாக நீங்கள், பல்வேறு உடல் நலம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன பாதிப்புகள் என்பதை பார்ப்போம்.

வயிற்றுப்போக்கு அல்லது வாயு பிரச்சனை:

இரவு நேரத்தில் உணவு உண்பதை தவிர்ப்பதால் சிலருக்கு வயிற்றுப்போக்கு அல்லது வாயு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இது உங்கள் செரிமான அமைப்பு பல மடங்கு பாதிக்கும் தன்மை கொண்டது.

மேலும் படிக்க….Sweet Potato Benefits: நீரழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஏன் உகந்தது..! மிஸ் பண்ணிடாதீங்க!

உடல் பலவீனமடையும்:

நீங்கள் இரவு உணவை உட்கொள்ளாமல் இருந்தால், உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. இதனால் உங்கள் உடல் பலவீனமடைகிறது. பலவீனத்தால் எளிதில் சோர்வடைகிறீர்கள்.

தூக்க சுழற்சி பாதிக்கப்படும்:

இரவு நேரத்தில் சாப்பிடாமல் உறங்கினால், உங்களின் இயல்பான தூக்க சுழற்சி பாதிக்கப்படும். இதனால் இரவில் தூக்கம் வராமல் எரிச்சலான மனநிலை இருக்கும். நீரழிவு நோயாளிகள் அல்லது ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் இரவு உணவை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில், இது உடலின் ரத்தச் சர்க்கரையின் அளவைப் பாதிக்கிறது. எனவே, மொத்தத்தில் நாம் ஆரோக்கியமாக நலமுடன் வாழ மூன்று வேளை உணவு சாப்பிடுவது அவசியம்.

மேலும் படிக்க….Sweet Potato Benefits: நீரழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஏன் உகந்தது..! மிஸ் பண்ணிடாதீங்க!

(Visited 47 times, 1 visits today)

Sharing is caring!