Sharing is caring!

Bigg boss 7 Fight: பிக்பாஸ் 7 வீட்டில் இன்று பிரதீப் ஆண்டனி ஆக்ரோஷமாக கத்துவது போன்ற காட்சிகள் தற்போது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

பிக்பாஸ் நிழ்ச்சியின் 7வது சீசன் ஒவ்வொரு நாளும் அதிரடி திருப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், 3 வாரத்தை கடந்து தற்போது 15 போட்டியாளர்களுடம் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஐந்து புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்:

இந்த வாரம் இறுதியில் பிக்பாஸ் சீசன் 7ல் இன்னும் ஐந்து புதிய போட்டியாளர்களை வைல்டு கார்டு போட்டியாளராக வருவதாக கமல் தெரிவித்துள்ளார். இவர்கள் வரும் (ஞாயிற்று கிழமை) 29ம் தேதி வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் வர உள்ளனர்.

இதன் மூலம், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கியுள்ளது.

மேலும் படிக்க…Bigg Boss Wild Card Entry: பிக்பாஸ் வீட்டிற்குள் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியாக நுழையும் 5 போட்டியாளர்கள்! ஷாக் கொடுத்த கமல்!

இந்த வாரம் நாமினேஷம் லிஸ்டில்:

இந்த வாரம் நாமினேஷம் லிஸ்டில், நிக்சன், மணி, மாயா, வினுசா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ஜோவிகா, பிரதீப், விஷ்ணு, யுகேந்திரன் மற்றும் அக்சரா ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில், வினுஷா தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.

மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த முறை, ஆரம்பத்திலே போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் செய்யும் விஷயங்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. மூன்றாவது வாரத்தில் முரணாக நடந்து கொண்ட விஜய் வர்மா வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் படிக்க…Bigg Boss Wild Card Entry: பிக்பாஸ் வீட்டிற்குள் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியாக நுழையும் 5 போட்டியாளர்கள்! ஷாக் கொடுத்த கமல்!

இன்று நடந்த ரேங்கிங் டாஸ்க்:

இந்நிலையில், இன்று நடந்த ரேங்கிங் டாஸ்க் அடிப்பையில், முதல் ரேங்க் டைட்டில் டைட்டில் வின்னரையும் 15வது ரேங்க் எலிமினேஷன் ஆகிற வாய்ப்பு இருப்பதையும் குறிக்கிறது.

பிரதீப் அனைவரிடமும் கடும் வாக்குவாதம்:

இதில் முதல் ரேங்கில் சென்று நிற்கும் பிரதீப் அனைவரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர் இந்த முதலிடத்தில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்றால் ‘என்ன அடிச்சு சாவடிச்சு இந்த இடத்த எடுத்துக்கோ’ என்று ஆக்ரோஷமாக கூறுவது போன்ற காட்சிகள் முதல் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது ப்ரோமோ:

இதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பிரதீப் ஆண்டனி மற்றும் ஜோவிகா இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு மிடில் கிளாஸ் விதத்தில் நான் வளர்ந்தேன் என்று ஜோவிகா கூறியதை கேட்டு பிரதீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க…Bigg Boss Wild Card Entry: பிக்பாஸ் வீட்டிற்குள் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியாக நுழையும் 5 போட்டியாளர்கள்! ஷாக் கொடுத்த கமல்!

(Visited 29 times, 1 visits today)

Sharing is caring!