Sharing is caring!

நீரழிவு நோயாளிகள் தாங்கள் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லையென்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து பல்வேறு பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தும். அப்படியாக, இன்றைய காலத்தில் தோசை, இட்லிக்கு மாற்றாக நீரழிவு நோயாளிகள் சாப்பிடும் முக்கிய உணவாக கோதுமை சப்பாத்தி உள்ளது. பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் அரிசி மாவிற்கு பதிலாக, கோதுமை மாவினை அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அரிசி மாவிற்கு, கிட்டத்தட்ட இணையான கார்போ ஹட்ரேட் கோதுமை மாவிலும் இருக்கிறது. எனவே, கோதுமை மாவு மற்றும் அரிசி மாவினை தவிர்த்து சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு முறைகளை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.

 ராகி மாவு:

அரிசிமாவு மற்றும் கோதுமை மாவிற்கு மாற்றாக ராகி மாவு எடுத்துக் கொள்வது, மிகச்சிறந்த உணவு வகையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில்,அரிசியின் புரத அளவை ஒப்பிடுகையில், ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது. இவை, நீரழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவினை உடலில் கட்டுப்படுத்துகிறது. இதில் புட்டு, கூழ், தோசை போன்றவையும் செய்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க….Fridge Food: ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாத 8 உணவுகள்..!

சோளா மாவு:

சோளா மாவில்  உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், செரிமான அமைப்பினை சீராக பராமரிக்கிறது. இதில் இட்லி, தோசை, உப்புமா போன்றவையும் செய்து சாப்பிடலாம்.

ஓட்ஸ் மாவு:

ஓட்ஸ் மாவானது உடலில் ரத்த சர்க்கரையில் அளவினை கட்டுக்குள் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து மனிதரின் உடலுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இந்த ஓட்ஸ் மாவுடன் காய்கறிகள் சேர்த்து பரோட்டா செய்யலாம். நீராவியில் வேக வைத்து இட்லி போன்ற வடிவிலும் இந்த ஓட்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க…Sweet Potato: நீரழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு உகந்ததா..? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..!

(Visited 15 times, 1 visits today)

Sharing is caring!