தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமாவிலும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா.

மயோசிடிஸ் என்ற தசை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, சிகிக்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியான குஷி படத்தில், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சினிமாவில், இருந்து சற்று ஓய்வு எடுக்க முயற்சி செய்த அவர் தற்போது, எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.

 அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் சமந்தா  தற்போது, பார்பி உடையில் புதுசாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

தற்போது, நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.