இந்த பிக்பாஸ் சீசனில் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக வலம் வந்தவர் பிரதீப் ஆண்டனி. இவர்தான், இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கமலுக்கு எதிராக தங்கள் கருத்து:
ஆனால், கடந்த வாரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் கமல். இது நியாமற்றது மற்றும் கடைசி வரை பிரதீப் இடம் அவருடைய தரப்பு நியாயத்தை கேட்கவில்லை என்று பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமலுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
மக்கள் மனதில், பிரதீப் இருப்பதால் அவர் வென்று விடுவாரோ என்ற அச்சத்தில் சக போட்டியாளர்கள் பொய்யான குற்ற சாட்டை முன்வைத்து வெளியே பிரதீப்பை வெளியே அனுப்பியதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
ஆதரவாக விசித்ரா – அர்ச்சனா தினேஷ் கூட்டணி:
இதனால், இவர்களுக்கு ஆதரவாக விசித்ரா – அர்ச்சனா தினேஷ் கூட்டணி களமிறங்கினர். இவர்களை எதிர்த்து மாயா, பூர்ணிமா, ஐஷூ , ஜோவிகா கூட்டணி மோதியதால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு பிக்பாஸ் வீடு பரபரப்பின் உச்சக்கட்டத்தை அடைந்தது.
மாயா, பூர்ணிமா கூட்டணி Bully Gang:
இதனால் Bully Gang என மாயா, பூர்ணிமா கூட்டணியை நெட்டிசன்கள் மோசமான விமர்சிக்கும் அளவுக்கு அவர்களது கேலி, கிண்டல் எல்லை மீறியது.
இது தொடர்பான சண்டை காட்சிகள் எல்லாம் இணையத்தில் வைரலானது. இதனால் கமலுக்கு எதிராக நிறைய எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், இந்த வாரம் இறுதியில் கமல் என்ன சொல்ல போகிறார். குறும்படம் இருக்குமா என்று எதிர்பார்ப்பு இருந்தது.
கமல், பிரதீப்பின் ரெட் கார்டு தொடர்பான சர்ச்சை:
நேற்றைய எபிசோடு முழுவதும் கமல், பிரதீப்பின் ரெட் கார்டு தொடர்பான சர்சை பற்றி தான் அதிகம் பேசி இருந்தார். இது குறித்து பேசிய கமல், பிரதீப்புக்கு அவரது தரப்பு நியாயத்தை முன்வைக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.
பிரதீப் செய்த தவறுக்கு கிடைத்த தண்டை:
அவருக்கு வாய்ப்பு கொடுத்தபோதெல்லாம் தன்னுடைய தவறுக்கு வருந்துவதோ, அல்லது காரணம் சொல்லுவதோ இல்லாமல், மற்றவர்கள் செய்ததை பற்றித்தான் பேசி கொண்டிருந்தார். அதுமட்டும் இல்லாமல், தான் 4 வயசுல இருந்தே இப்படி தான் சார் இருந்தேன் என்றும், நிறைய சின்ன பசங்களுக்கு நான் தான் கெட்ட வார்த்தை கற்றுக் கொடுத்தேன் என்று கூறி கொண்டிருந்தார்.
இன்னும் தனக்கான குழியை ஆழம் வெட்டிக்கொள்வாரோ என நினைத்ததால் தான் சரி போதும் உட்காருங்கேனு சொன்னேன். இது அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தானு பேசி இருந்தார்.மேலும், அது பிரதீப் செய்த தவறுக்கு கிடைத்த தண்டை என்றும் பேசியிருந்தார். இருப்பினும், கமலின் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை என்று பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
பிரதீப் தீபாவளி பண்டிகை:
இதையடுத்து, பிரதீப் தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தோடு கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.இதையடுத்து, பிரதீப் என்ன செய்ய போகிறார் என்று அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இயக்குனர் கனவு விரைவில் நிறைவேறும்:
சினிமாவில் படம் இயக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய கனவு என்றும், இந்த டைட்டிலை தான் ஜெயித்தால் தன்னால் இயக்குனராக முடியும் எனவும் பிரதீப் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறினார். ஆனால், தற்போது டைட்டில் ஜெயிக்க முடியாவிட்டாலும் அவரது இயக்குனர் கனவு விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதீப்புக்கு ஜாக்பாட் வாய்ப்பு:
அதன்படி, பிரதீப்புக்கு பிக்பாஸ் ரெட் கார்டு கொடுத்தாலும், தற்போது விஜய் டிவி ஒரு ஜாக்பாட் வாய்ப்பை வழங்கி இருக்கிறதாம். அதன்படி, ஹாட்ஸ்டாருக்காக ஒரு வெப் தொடர் இயக்க பிரதீப்பிடம் கதை கேட்டு இருக்கிறார்களாம். அதனை தயார் செய்யும் பணியில் பிரதீப் தற்போது தீவிரமாக இருக்கிறாராம். விரைவில் கதை சொல்லி அது அவரது சினிமா கனவை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பிரதீப் நான் படம் பண்ணும்போது உங்க ஆதரவு கொடுங்கள் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.