Guru Peyarchi 2023 Palangal: மேஷ ராசியில் குருவின் மாற்றத்தால் அடுத்த ஒருவருடத்திற்கு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் இடப்பெயர்ச்சி அல்லது ராசி மாற்றம் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறது. இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கிறது. அதன்படி, தேவகுரு வியாழன் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி (அட்சய திருதியை நாளில்) மீன ராசியில் இருந்து விலகி மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, குரு பகவான் அடுத்த ஒருவருடத்திற்கு அதாவது 2024 மே 1 வரை மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்தநிலையில், குருவுடன், ராகு சேர்வதால் குரு சண்டாள யோகம் உருவாகிறது.
இதனால், மேஷம், சிம்மம், துலாம், கன்னி உள்ளிட்ட 5 ராசிக்கார்களுக்கு குருபகவான் அதிர்ஷ்டம், முன்னேற்றம் என அனைத்தையும் தர உள்ளார். குறிப்பாக, சிம்ம ராசிக்காரர்களின் வாழ்கை இதனால் அமோகமாக இருக்கும். பெரும்பாலான ராசிகளுக்கு இந்த குரு பெயர்ச்சியின் மூலம் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேஷம்:
குருவின் மாற்றத்தால் மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருக்கும். காதலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
சிம்மம்:
குருவின் இடப்பெயர்ச்சி சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். ஆன்மீக காரியங்களில் சுப பலன்கள் கிடைக்கும். திருமண காரியம் கைகூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
குரு பெயர்ச்சி காரணமாக துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். காதல் கைகூடும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் புதிய வேலையைத் தொடங்கி வெற்றி பெறுவீர்கள். வீடு தேடி சுப செய்திகள் வரும்.இந்த நேரத்தில், குரு உங்களின் செல்வத்தை அதிகரிப்பார். அரசாங்க வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.